முத்துலட்சுமி சபதம்: மிரட்சியில் திமுக
மேட்டூர்:
பெண்ணாகரம் தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று வீரப்பன் மனைவிமுத்துலட்சுமி கூறியுள்ளார்.
பெண்ணாகரம் தொகுதியில் முத்துலட்சுமி சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.இத்தொகுதியில் திமுக சார்பில் பெரியண்ணன் களத்தில் நிற்கிறார்.அதிமுக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதாதளம் இத்தொகுதியில் போட்டியிடுகிறது.
பெரியண்ணனுக்கும், முத்துலட்சுமிக்கும்தான் இங்கு நேரடிப் போட்டி நிலவுகிறது.முத்துலட்சுமிக்கு பாமகவில் ஒரு தரப்பினர் மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளதால்பெரியண்ணன் நிலை சிக்கலாகியுள்ளது.
இதை மனதில் கொண்டே, முத்துலட்சுமியை வாபஸ் பெறுமாறு பாமக நிறுவனர்டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்தார். ஆனால் அதை நிராகரித்து விட்டார்முத்துலட்சுமி.
இந் நிலையில் வீரப்பன் மீது அன்பும், பாசமும் வைத்துள்ளவர்கள் பெண்ணாகரம்தொகுதியில் எனக்கு வெற்றியைக் கொடுப்பார்கள் என்று முத்துலட்சுமி கூறியுள்ளார்.
வீதி வீதியாக, வீடு வீடாக சென்று தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முத்துலட்சுமிஇதுகுறித்து கூறுகையில்,
இதுவரை 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து விட்டேன்.செல்லும் இடமெல்லாம் எனக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மக்கள் மத்தியில் என் மீதுஅனுதாபம் காணப்படுகிறது.
இந்த அனுதாபம் எல்லாம் ஓட்டுக்களாக மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. என்கணவர் மீது பாசம், அன்பு கொண்டவர்கள் இத்தொகுதியில் ஏராளம். எனவேஅவர்கள் எனக்கு வெற்றியைத் தேடித் தருவார்கள்.
ராமதாஸ் எனக்கு தந்தையைப் போன்றவர். அவர் மீது மிகுந்த மரியாதைவைத்துள்ளேன். ஆனால் இப்போது காலம் கடந்து விட்டதால் அவரது கோரிக்கையைஏற்க முடியாத நிலையில் உள்ளேன். மக்களின் அன்புப் பிடியில் நான் சிக்கியுள்ளேன்.
அதிலிருந்து விடுபட்டு வருவது கடினம். (தேர்ச்சி பெற்ற அரசியல்வாதியே மாதிரியேபேசுகிறார்) சின்னம் கிடைத்தவுடன் பிரசாரத்தை தீவிரப்படுத்துவேன். சமுதாயமுன்னேற்றத்துக்காக நான் தீவிரமாகப் பாடுபடுவேன் என்றார் முத்துலட்சுமி.












Click it and Unblock the Notifications