காவிரி-மத்திய அரசு தலையிட திமுக கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை உடனடியாக வெளியிடத் தேவையானநடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று திமுககூட்டணிக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

காவிரி நடுவர் மன்றத்தின் இரு உறுப்பினர்களின் பிடிவாத வலியுறுத்தல் காரணமாகதமிழக விவசாயிகளுக்கு பாதகமான தீர்ப்பை நடுவர் மன்றம் வெளியிட்டுள்ளது.இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்க திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக்கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் சென்னையில் இன்று காலை நடந்தது.

அண்ணா அறிவாலயத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு திமுக தலைவர் கருணாநிதிதலைமை தாங்கினார். இதில், குமரி அனந்தன், வரதராஜன், டி.கே.ரங்கராஜன்,துரைமாணிக்கம், காதர் மொஹைதீன், ஏ.கே.மூர்த்தி, ஆற்காடு வீராசாமி,துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில்,

காவிரி நடுவர் மன்றத்தின் புதிய தீர்ப்பு குழப்பத்தை உண்டு பண்ணுவதோடு, நடுவர்மன்றம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைப்பதாக உள்ளது.

எனவே இந்த உத்தரவை வாபஸ் பெற்றுக் கொண்டு ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ள வாதங்களின் அடிப்படையில், தாக்கல் செய்யப்பட்டுள்ளஆவணங்களின் அடிப்படையில் இறுதித் தீர்ப்பை வெளியிட நடுவர் மன்றம்நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை வெளியிடத் தேவையான அனைத்துநடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்றும்இக்கூட்டம் ஒருமனதாக கேட்டுக் கொள்கிறது.

காவிரி நடுவர் மன்றம் தனது தீர்ப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றுவலியுறுத்தி தமிழக விவசாயிகளும், பொது மக்களும் நடுவர் மன்றத்திற்கு தந்திகளைஅனுப்புமாறும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

மேலும் இந்த விவகாரத்தில் தமிழகத்தின் நிலை தான் மத்திய அரசின் நிலையாகவும்இருக்கும் என்று நம்புகிறோம். சம்பந்தப்பட்ட 4 மாநிலங்களும் தேவையான புள்ளிவிவரங்களை, ஆவணங்களை கொடுத்தாகிவிட்டது. இனி முடிவு அறிவிக்கவேண்டியது தான் பாக்கி. இந்த நிலையில் மறுபடியும் முதலில் இருந்தே ஆராயமுடியாது.

எங்கள் கூட்டணி இது தொடர்பாக நிறைவேற்றிய தீர்மானத்தை பிரதமரிடம்கொடுப்போம். இன்று சென்னையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும்இதை விளக்கிச் சொல்வேன்.

நடுவர் மன்றத்தில் நடந்தது என்ன?:

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி விசாரணை வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது.

இந்த மன்றத்தின் தலைவராக என்.பி.சிங் உள்ளார். உறுப்பினர்களாக சுதீர் நாராயணன்,என்.எஸ்.ராவ் ஆகியோர் உள்ளனர்.

இதில் ராவும், சுதீர் நாராயணனும் கடந்த வெள்ளிக்கிழமை புதிய குழப்பத்தைஏற்படுத்தினர். இந்த இருவரும் சேர்ந்து வெளியிட்ட உத்தரவில்,

காவிரி விவகாரத்தில் புதிதாக 3 பேர் கொண்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைக்கவேண்டும். இந்தக் குழு, காவிரிப் பாசன மாநிலங்களான தமிழகம், கர்நாடகம்,புதுவை மற்றும் கேரளாவில் ஆண்டுக்கு எத்தனை முறை பயிர் சாகுபடிநடைபெறுகிறது,

சாகுபடிக்குத் தேவையான ஆண்டு நீர் விவரம் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து அறிக்கைசமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தனர்.

அவர்களது முடிவுக்கு நடுவர் மன்றத் தலைவர் என்.பி.சிங் கடும் எதிர்ப்புதெரிவித்தார்.

அவர்களது முடிவுக்கு நடுவர் மன்றத் தலைவர் என்.பி.சிங் கடும் எதிர்ப்புதெரிவித்தார். நடுவர் மன்றம் விசாரிக்க ஆரம்பித்து 16 ஆண்டுகள் ஆகி விட்டன. இந்நிலையில் புதிதாக ஒரு குழுவை அமைத்தால் வழக்க முடிய மேலும் 10 ஆண்டுகள்ஆகும். எனவே நடுவர் மன்றமே தீர்ப்பை வழங்க வேண்டும் என்றார்.

ஆனால் அவரது கருத்தை மற்ற இரு உறுப்பினர்களும் ஏற்கவில்லை.

இதைத் தொடர்ந்து 2க்கு 1 என்ற பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில், புதியகுழு வை அமைக்க மத்திய அரசுக்கு நடுவர் மன்றம் உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+