திமுக வேட்பாளர் விதிமீறல்: அதிமுக புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அறந்தாங்கி தொகுதி திமுக வேட்பாளர் அப்பட்டமான விதி மீறலில் ஈடுபட்டுள்ளார்.எனவே அவரை தேர்தலில் போட்டியிட தடை செய்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும்என்று கோரி தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் அதிமுக சார்பில் புகார்கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக சார்பில் வழக்கறிஞர் ஜோதி அனுப்பியுள்ள கடிதத்தில்,அறந்தாங்கி தொகுதியில் திமுக வேட்பாளர் அப்பட்டமாக தேர்தல் நடத்தைவிதிமுறைகளை மீறி வருகிறார். என்ன வகையான விதிமீறல்களைச் செய்யமுடியுமோ அத்தனையையும் அவர் செய்து வருகிறார்.பிற மாநிலங்களிலிருந்து ஏராளமான வாகனங்களை தொகுதிக்குள் கொண்டுவந்துள்ள திமுக வேட்பாளர் அதிமுக குறித்த தவறான புகைப்படக் கண்காட்சியைநடத்தி வருகிறார்.
வீடியோ படங்களையும் அவர் திரையிட்டு வருகிறார்.
அவர் ஒளிபரப்பும் வீடியோ படத்திற்கு தேர்தல் ஆணையம் இன்னும் அனுமதிகொடுக்கவில்லை. அனுமதி இல்லாமல் படத்தை வெளியிட்டதற்காக போலீஸ்தரப்பிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே அறந்தாங்கி திமுக வேட்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அவரைதேர்தலில் போட்டியிட விடாமல் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஜோதிகூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications