தேர்தல் களத்தில் 2,586 வேட்பாளர்கள்: ஆண்டிப்பட்டி-16, சேப்பாக்கம் 20
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் 2,586 வேட்பாளர்கள் இறுதியாக களத்தில் உள்ளனர்.
திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் போட்டியிடும் ஆயிரம் விளக்குதொகுதியில்தான் தமிழகத்திலேயே அதிக அளவாக 26 பேர் போட்டியிடுகின்றனர்.முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆண்டிப்பட்டியில் 16 பேரும், திமுக தலைவர்கருணாநிதி போட்டியிடும் சேப்பாக்கத்தில் 20 பேரும் களத்தில் உள்ளனர்.தமிழக சட்டசபைத் தேர்தல் வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான காலஅவகாசம் நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. வாபஸ் பெறுவதற்கான காலக்கெடுவுக்குள் 274 பேர் மனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.
இதையடுத்து தேர்தல் களத்தில் இறுதியாக 2586 பேர் நிற்கின்றனர்.
தமிழகத்திலேயே அதிக அளவில் ஸ்டாலின் போட்டியிடும் ஆயிரம் விளக்குதொகுதியில்தான் 26 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு மொத்தம் 30 பேர் மனுதாக்கல் செய்தனர். 3 மனுக்கள் தள்ளுபடியாகின. ஒருவர் வாபஸ் பெற்றுக்கொண்டார்.
தஞ்சை மாவட்டம் ஓரத்தநாடு தொகுதியில் தான் குறைந்தபட்சமாக 4 பேர் மட்டுமேதேர்தல் களத்தில் உள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆண்டிப்பட்டி தொகுதியில், 16 பேர் இறுதியாககளத்தில் உள்ளனர். இங்கு மொத்தம் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன, 3 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. இதில்கார்த்திக்கின் பார்வர்ட் பிளாக் வேட்பாளர் பொன்.முருகனும் அடங்குவார்.
திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதியில் 25 மனுக்கள்தாக்கல் செய்யப்பட்டன. 3 மனுக்கள் தள்ளுபடியாகின, 2 மனுக்கள் வாபஸ்பெறப்பட்டன. இதைத் தொடர்ந்து மொத்தம் 20 பேர் களத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications