ஆண்டிப்பட்டியில் மனு தாக்கல் செய்யச் சென்ற எம்ஜிஆர் அண்ணன் மகள் அதிமுகவினரால் கடத்தல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆண்டிப்பட்டி தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக வேட்பு மனு தாக்கல்செய்ய சென்ற மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் அண்ணன் மகள் லீலாவதியைஅதிமுகவைச் சேர்ந்த ஒரு கும்பல் கடத்திச் சென்றுள்ளது.

எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியின் மகள்தான் லீலாவதி. எம்.ஜி.ஆர். சிறுநீரகம்பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த போது, அவருக்கு சிறுநீரகம் தானம்செய்தவர் லீலாவதி.

தற்போது லீலாவதி பரபரப்பான புகார் ஒன்றைத் தெரிவித்துள்ளார். தான்ஆண்டிப்பட்டி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்றதாகவும், அப்போதுஅதிமுகவைச் சேர்ந்த சிலர் தன்னை மடக்கி கடத்திச் சென்று நான்கு நாட்கள் ஒருஇடத்தில் அடைத்து வைத்திருந்தார்கள்.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் முடிந்தவுடன்தான் தன்னைவிடுவித்தனர் என்று அவர் கூறியுள்ளார்.

(கார்த்திக்கும் கூட வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாளன்று தூக்கிச்செல்லப்பட்டதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது)

லீலாவதியின் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் லீலாவதியின்புகாரை அவரது சகோதரர் ராஜேந்திரன் மறுத்துள்ளார்.

இதுகுறித்து ராஜேந்திரன் கூறுகையில், எனது சகோதரி லீலாவதி கடந்த திங்கள்,செவ்வாய் ஆகிய இரு தினங்களும் கோவையில் இருந்தார். பின்னர் சென்னைதிரும்பினார். வியாழக்கிழமை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில்ஆஜரானார். அதன் பிறகு வீடு திரும்பி விட்டார்.

வியாழக்கிழமைதான் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள். இந் நிலையில் அவர்ஆண்டிப்பட்டிக்குச் சென்றதாகவும், அங்கு அவரை சிலர் கடத்திச் சென்றதாகவும்அவர் கூறியிருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது. அவர் ஏன் இப்படிச் சொல்கிறார் என்றுபுரியவில்லை என்றார் ராஜேந்திரன்.

ஆனால், ராஜேந்திரனை அதிமுக வளைத்துவிட்டதாக லீலாவதி தரப்பில்கூறப்படுகிறது.

லீலாவதியின் இந்தப் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,இதுகுறித்து முறைப்படி புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம் என தமிழகதலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.

இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் செய்தியாளர்கள்கேட்டபோது, எம்.ஜி.ஆர். உறவினர் லீலாவதியை சிலர் கடத்திச் சென்றது தொடர்பாகஎங்களுக்கு முறையான புகார் வரவில்லை.

எழுத்துப்பூர்வமாக, முறையாக புகார் கொடுக்கப்பட்டால் நடவடிக்கை எடுப்போம்.

அதேபோல மதுரை திருமங்கலம் தொகுதி பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர் செந்தில்தற்கொலை செய்து கொண்டது தொடர்பாகவும் முறைப்படியான புகாரைப் பெற்றால்நடவடிக்கை எடுப்போம்.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள கலர் டிவி உள்ளிட்ட வாக்குறுதிகள்குறித்து புகார்கள் வந்துள்ளன. அதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையம்உத்தரவிடடால் நடவடிக்கை எடுக்கப்படும்.

அமைச்சர் ஜெயக்குமார் வாக்காளர்களுக்கு தையல் இயந்திரங்கள் கொடுத்ததாக வந்தபுகார் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் விசாரணை நடத்தி அறிக்கைகொடுத்துள்ளார்.

இருப்பினும் ஜெயக்குமார் தையல் இயந்திரங்களைக் கொடுப்பது போன்ற வீடியோக்காட்சிகளைக் கோரியுள்ளோம். அதைப் பார்த்த பின்னர் நடவடிக்கை எடுப்பது குறித்துபரிசீலிக்கப்படும்.

16 வேட்பாளர்களுக்கு மேல் இருந்தால் அங்கு இரண்டு மின்னணு வாக்குப் பதிவுஇயந்திரங்கள் பயன்படுத்தப்படும். தற்போதைய தேர்தலில் 7 தொகுதிகளில் மட்டுமேஇரண்டு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

அவை ஆயிரம் விளக்கு, (26 வேட்பாளர்கள்), வில்லிவாக்கம் (22), சைதாப்பேட்டை(21), புரசைவாக்கம் மற்றும் சேப்பாக்கம் (தலா 20), சிதம்பரம் (18), மதுரை மத்தி(17) என்றார் குப்தா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+