செளதி: தொழிலாளர்களுக்கு பல புதிய சலுகைகள்
துபாய்:
செளதி அரேபியாவின் தொழிலாளர் நலச் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சலுகைகளை இந்தியர்கள்உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வரவேற்றுள்ளனர்.
இம்மாதம் 23ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த சட்டத் திருத்தத்தின்படி,தொழிலாளர்கள் வேலைக்கு சேர்க்கப்பட்டது முதல் வேலை முடிந்து அனுப்பப்படும் வரை அவர்களதுவேலைக்கான பர்மிட்டை ரினீவைல் செய்வது உள்ளிட்ட பணி தொடர்பான அனைத்து செலவுகளையும்அந்ததந்த நிறுவனங்களே ஏற்க வேண்டும்.
மேலும் பணிக் காலம் முடிந்து செல்லும் தொழிலாளர்களுக்கு அவர்களுக்குத் தர ஒப்புக் கொள்ளப்பட்டஅனைத்து சலுகைகளும், படிகளும் முறையாக வழங்கப்பட வேண்டும்.
மேலும் தங்கள் நாட்டில் எந்த வேலைக்காக அவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்களோ அதேவேலையைத் தான் செளதியிலும் வழங்க வேண்டும். இங்கு வந்த பின்னர் வேறு பணிக்கு அவர்களைகட்டாயப்படுத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கக் கூடாது.
தொழிலாளியின் ஸ்பான்ஸர் மாறும்போதும், வேலை மாறும்போதும் கட்ட வேண்டிய கட்டணம், அவரதுஎக்ஸிட்-ரீ என்ட்ரி விசாவுக்கான கட்டணம் ஆகியவற்றை அந்ததந்த நிறுவனங்களே செலுத்த வேண்டும்.
ஒப்பந்தம் முடிந்து செல்லும் தொழிலாளிக்கு விமான டிக்கெட்டையும் அந்த நிறுவனமே வழங்க வேண்டும்.
செளதியில் பணியாற்றும்போது இறக்கும் தொழிலாளியின் உடலை அவரது சொந்த நாட்டுக்கு அனுப்பும்பொறும்பும் அந்தந்த நிறுவனங்களையே சாரும். அதற்கான கட்டணத்தை அந்த நிறுவனமே வழங்க வேண்டும்.இவ்வாறு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்லப்படும் பெண்களுக்கு எதிராக கொடுமைகளைக்கட்டுப்படுத்துவது தொடர்பான இந்தச் சட்டத் திருத்தத்தில் எந்த அறிவிப்பும் இல்லை.












Click it and Unblock the Notifications