தமிழகத்தில் ஊழல், சர்வாதிகார ஆட்சி-சோனியா

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

தமிழகத்தில் நிலவும் ஊழல், சர்வாதிகார ஆட்சியைப் போல புதுவையிலும் அமைந்துவிடாமல் புதுவை மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும், காங்கிரஸ்கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றுகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்திகூறியுள்ளார்.

இன்று காலை கேரள மாநிலம் கோழிக்கோட்டிலிருந்து சென்னை வந்த அவருக்குவிமான நிலையத்தில் மிகச்சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, மேலிடப் பார்வையாளர் வீரப்ப மொய்லி, மத்தியஅமைச்சர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ராஜா, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்உள்ளிட்ட தலைவர்கள் சோனியாவை வரவேற்றனர். பின்னர் ஹெலிகாப்டர் மூலம்சோனியா காந்தி புதுவை சென்றார்.

புதுவை உப்பளம் துறைமுக மைதானத்தில் நடந்த பிரமாண்டக் கூட்டத்தில் சோனியாகாந்தி பேசினார். இக்கூட்டத்தின் வாயிலாக புதுவையில் போட்டியிடும் காங்கிரஸ்கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரித்தார்.

இக் கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் அனைவரையும் சோனியா காந்திமேடையில் அறிமுகப்படுத்தினார்.

பின்னர் அவர் பேசுகையில், புதுவையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நல்லாட்சியைநடத்தி வருகிறது காங்கிரஸ். இந்த திட்டங்கள் தொடரவும், மேலும் சிறப்பாகஅமல்படுத்தவும் வரும் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஆதரவளிக்கவேண்டும்.

புதுவை மாநிலம் சிறப்பான அந்தஸ்தைப் பெறவும் அமைதியான மாநிலமாகத்திகழவும் காங்கிரஸ் ஆட்சி தொடர வேண்டியது அவசியம். காங்கிரஸ் கட்சி மற்றும்கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு புதுவை மக்கள் பேராதராவை நல்கவேண்டும்.

பக்கத்து மாநிலத்தில் (தமிழகத்தில்) சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது. ஊழல்தலைவிரித்தாடுகிறது. அதனால் மக்கள் எந்த அளவுக்கு சீரழிந்து இருக்கிறார்கள்என்பதை யோசித்துப் பாருங்கள். அந்த நிலை இங்கும் ஏற்பட்டு விடாமல் தடுக்ககாங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

ஐந்து ஆண்டு காலம் நிலையான ஆட்சி அமைய காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மைஇடங்களில் வாக்களிக்க வேண்டும் என்றார் சோனியா.

இக் கூட்டத்தில் புதுவை தல்வர் ரங்கசாமி, காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி, மத்தியஅமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சென்னை திரும்பிய சோனியா அங்கிருந்து விமானம்மூலம் மதுரை சென்றார். அங்கு தமுக்கம் மைதானத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பேசிவிட்டு இன்று மாலை சென்னை திரும்புகிறார்.

இரவு சென்னை தீவுத் திடலில் நடைபெறும் பிரமாண்டக் கூட்டத்தில் கலந்து கொண்டுபேசுகிறார். இக் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ்உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+