கொழும்பில் தற்கொலை தாக்குதல்: இலங்கை ராணுவ தளபதி படுகாயம்-8 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள ராணுவ தலைமையகத்தில் மிகப் பெரிய குண்டு வெடிப்புத் தாக்குதல்நடந்தது. இதில் இலங்கை ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா படுகாயமடைந்துள்ளார்.அவரது பாதுகாவலர்கள் 5 பேர் உள்பட 8 பேர் பலியாயினர்.

ராணுவ தலைமையகத்தின் எதிரே உள்ள ராணுவ மருத்துவமனையில் இந்தத் தாக்குதல் நடந்தது.

சரத் தனது மனைவியுடன் மருத்துவமனைக்கு வந்துவிட்டுத் திரும்புகையில் இந்தச் சம்பவம் நடந்தது.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் கார் அணிவகுப்பு ராணுவ மருத்துவமனையைத் தாண்டிய வினாடியில் ராணுவத்தளபதியின் வாகனத்தை நோக்கி ஒரு பெண் பாய்ந்ததாகவும், அவர் வெடித்துச் சிதறியதாகவும் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல் நடந்தது. ஜெனரலின் காரின் முன்பும் பின்பும் மோட்டார் சைக்கிள்களில் சென்ற அவரதுபாதுகாவலர்கள் 5 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர். மேலும் இரு பொது மக்களும் பலியாயினர். பலர்படுகாயமடைந்தனர்.

கர்ப்பிணி போல நடித்த ஒரு பெண் விடுதலைப் புலி தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

தாக்குதல் நடந்துள்ள ராணுவ தலைமையகம் இலங்கையில் மிக பலத்த பாதுகாப்பு கொண்ட பகுதி என்பதுகுறிப்பிடத்தக்கது. குண்டு வெடிப்பில் சரத் பொன்சேகா சென்ற கார் தூக்கி வீசப்பட்டது. அதிலிருந்த சரத்படுகாயமடைந்துள்ளார்.

ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசு கடுமையான நிலையை மேற்கொள்ளச் செய்தவர்களில்முக்கியமானவர் சரத். மேலும் கருணா கோஷ்டிக்கு ராணுவ உதவிகள் கிடைப்பதில் இவருக்கு முக்கியஇருப்பதாக புலிகள் கருதுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+