திருமா-மணி, முத்துலட்சுமி சீப்பு, டிஆர்-ரயில்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தொல் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 9 வேட்பாளர்களுக்கும்கோவில் மணி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பெண்ணாகரம் தொகுதியில் போட்டியிடும் வீரப்பன் மனைவி முத்துலட்சுமிக்கு சீப்புசின்னம் கிடைத்துள்ளது. லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தருக்கு ரயில்என்ஜின் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

சுயேச்சை என்ற அந்தஸ்துடன் தேர்தல் களம் கண்டுள்ள பல முக்கியவேட்பாளர்களுக்கு வித்தியாசமான சின்னங்கள் கிடைத்துள்ளன.

நநிடிகர் விஜயகாந்த் கட்சிக்கு பெரும்பாலான தொகுதிகளில் முரசு சின்னம்கிடைத்துள்ளது. சில தொகுதிகளில் மோதிரம் கிடைத்துள்ளது.

வீரப்பன் மனைவி முத்துலட்சுமி பெண்ணாகரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.பாமகவின் ஒரு தரப்பினரின் ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிடும் அவருக்குசீப்பு சின்னம் கிடைத்துள்ளது.

சீப்பு சின்னத்தை 6 வேட்பாளர்கள் கோரினர். இறுதியில் குலுக்கல் முறையில் அந்தச்சின்னம் முத்துலட்சுமிக்குக் கிடைத்தது.

மயிலாடுதுறையில் போட்டியிடும் விஜய டி.ராஜேந்தருக்கு ரயில் என்ஜின் சின்னம்கிடைத்துள்ளது. இத்தொகுதியில் மதிமுக, காங்கிரஸ் இடையே கடும் போட்டிநிலவுகிறது.

ஏற்கனவே முன்பு ஒரு முறை திமுகவிலிருந்து வெளியேறி தாயக மறுமலர்ச்சிக்கழகம் என்ற கட்சியைஆரம்பித்த ராஜேந்தர் மயிலாடுதுறையில் சுயேச்சையாக நின்றுரயில் என்ஜின் சின்னத்தில்தான் போட்டியிட்டார்.

அப்போது ரயில் என்ஜின் போல வடிவமைக்கப்பட்ட வாகனத்தை தொகுதி முழுவதும்சுற்ற விட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது நினைவிருக்கலாம்.

இந்த முறையும் ராஜேந்தர் ரயில் விடுவாரா ராஜேந்தர் என்பது தெரியவில்லை.

திருமா. கட்சிக்கு ஒரே சின்னம்:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 9 வேட்பாளர்களுக்கும் கோவில் மணி சின்னம்ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் 9 தொகுதிகளில்போட்டியிடுகிறது. இதில் ஒரு தொகுதி மட்டும் பொதுத் தொகுதியாகும். மற்றஅனைத்தும் தனித் தொகுதிகள்.

இக்கட்சியின் அனைத்து வேட்பாளர்களுக்கும் கோவில் மணி சின்னம்ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலிலும் விடுதலைச் சிறுத்தை வேட்பாளர்கள் ஒரே சின்னத்தில் அதாவதுதிமுகவின் உதயசூரியன் சின்னத்தின் கீழ் போட்டியிட்டன என்பது நினைவிருக்கலாம்.

செங்கம், உளுந்தூர்ப்பேட்டை, மங்களூர், வால்பாறை, சீர்காழி, அரூர்,ஸ்ரீபெரும்புதூர், காட்டு மன்னார்கோவில் ஆகிய தனித் தொகுதிகளிலும்முகையூரிலும் இக்கட்சி போட்டியிடுகிறது.

ஒரே சின்னம் கோரிய விஜயகாந்த் கட்சிக்கு அப்படிக் கிடைக்காத நிலையில்விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒரே சின்னம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+