கலர் டிவிக்கு யாரு கரண்டு பில் கட்றது?-வைகோ
ராமநாதபுரம்:
கையில் காசில்லாவிட்டாலும் ரேசன் அட்டை இருந்தால் போதும் 10 கிலோ அரிசி வாங்கி உலையில் போடாலாம்என்ற ஏழைகளுக்கான திட்டத்தை புண்ணியவதி ஜெயலலிதா அறிவித்துள்ளார் என வைகோ கூறினார்.
ராமநாதபுரத்தில் மதிமுக வேட்பாளர் கராத்தே பழனிச்சாமியை ஆதரித்து அக் கட்சியின் பொதுச் செயலாளர்வைகோ பேசியதாவது:ரேசன் கடைகளில் 2 ரூபாய்க்கு அரிசி போடுவோம் என்று கருணாநிதி சொன்னதை அன்று முதல் இன்று வரைவிமர்சிக்கிறேன். அவர் சொல்வது பித்தலாட்டம். தமிழ்நாட்டில் அரிசி விலையை உயர்த்தியதே அவர் தான்.
5 வருடம் நீங்கள் (திமுக) ஆட்சியில் இருந்தபோது 32 லட்சம் குடும்பங்கள் ரேசன் கார்டு வாங்க வீட்டிற்கும்தாலுகா ஆபிசுக்குமாய் தவியாய் தவித்தார்களே. 5 வருடம் ஆட்சியில் இருந்தும் 2 ரூபாய்க்கு அரிசி குடுக்கயோக்கியதை இல்லாத நீங்களா 2 ரூபாய்க்கு அரிசி தரப் போகிறீர்கள்.
இந்த ஆட்சியில் 1.88 கோடி குடும்பங்களுக்கு ரேசன் கார்டு தரப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்கள்தவியாய் தவித்த வேளையில் மத்திய அரசின் உதவியே இல்லாமல் சமாளித்த புரட்சித் தலைவி இப்போதுபுரட்சிகரமாக 10 கிலோ அரிசி இலவசம் என்று அறிவித்துள்ளார்.
கையில் காசில்லாவிட்டாலும் ரேசன் அட்டை இருந்தால் போதும் 10 கிலோ அரிசி வாங்கி உலையில் போடாலாம்என்ற ஏழைகளுக்கான திட்டத்தை இந்த புண்ணியவதியின் அரசு தான் அறிவித்துள்ளது.
20 கிலோ அரிசியை ஒரே நேரத்தில் வாங்க முடியாதவர்கள், பணம் இல்லாதவர்கள் அதை 2 தவணையாகபிரித்து வாங்கிக் கொள்ளலாம் என்ற அரிய யோசனையை கலைஞர் சொல்லியிருக்கிறார்.
நான் கேட்கிறேன், கையில் 40 ரூபாய் இல்லாதவர் நீங்கள் கொடுக்கும் கலர் டிவிக்கு கரண்டு பில்லை எப்படிகட்டுவான். காஸ் அடுப்பு குடுப்பாராம்.. சிலிண்டர் வாங்க பணத்துக்கு எங்கே போவார்கள்?
காவிரிப் பிரச்சனையில் கருணாநிதியின் துரோகததை நான் 2 மணி நேரம் பட்டியலிட்டுக் கூற முடியும் என்றார்வைகோ.
-
சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி, பாமக போட்ட பிச்சை! சி.வி.சண்முகம் காட்டம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications