சீமாட்டி ஜெ. சீமானிடம் தோற்பார்: ராமதாஸ்
சேலம்:
மே 14 அல்லது 15ம் தேதி கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்றார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்ஓவர் நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.
சேலத்தில் பிரச்சாரக் கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:ஆண்டிப்பட்டியை அரசிப்பட்டியாக்குவேன் என்று மறுபடியும் சொல்லிக் கொண்டு அங்கு 3 நாட்களாக சுற்றிவந்தார் ஜெயலலிதா. ஆனால், அவரது பிரச்சாரத்துக்கு கூட்டமே வரவில்லைய
ஆனால், கருணாநிதி அங்கே போனபோது கூட்டம் அலைமோதியிருக்கிறது. சீமாட்டி ஜெயலலிதா, சீமானிடம்(திமுக வேட்பாளர்) தோற்பது உறுதி.
நான் எதையும் சும்மா சொல்ல மாட்டேன். என் கணக்கு எப்போதுமே தப்பியது இல்லை. மக்களின் நாடி பிடித்துப்பார்த்துவிட்டேன். அதிமுக சார்பில் ஒரு எம்எல்ஏ கூட சட்டசபைக்குள் வரப் போவதில்லை.
14 அல்லது 15ம் தேதி கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்றார்.
தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு எதிரான அலை கிளம்பும் என்று இரு வாரங்களுக்கு முன் சொன்னேன். அந்தஅலை வீச ஆரம்பித்துவிட்டது என்றார்.
பின்னர் கோபிச்செட்டிப் பாளையத்தில் பிரச்சாரம் செய்த ராமதாஸ்,
இந்தத் தேர்தலோடு அதிமுகவின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வரப் போகிறது.
இங்கு போட்டியிடும் செங்கோட்டையனுக்கு ஓட்டு போட்டுவிடாதீர்கள். அவர் என்ன வேலை பார்க்கிறார் என்றுஎல்லோருக்கும் தெரியும்.
போயஸ் தோட்டத்துக்கு எடுபிடி தான் செங்கோட்டையன். அவரது வரலாறும் உங்களுக்குத் தெரிந்தது தான்.அவருக்கு ஓட்டு போட்டால் மீண்டும் போயஸ் தோட்டத்தில் எடுபிடி வேலைக்குத் தான் போவாரே தவிரஉங்களையெல்லாம் கண்டுகொள்ள அவருக்கு நேரம் இருக்காது என்றார்.












Click it and Unblock the Notifications