கார்த்திக்குக்கு தடை: இளையான்குடியில் பற்றம்- போலீஸ் குவிப்பு
பரமகுடி:
கார்த்திக்கை பிரச்சாரம் செய்ய விடாமல் போலீசார் தடுத்ததால் இளையான்குடி பகுதியில் பார்வர்ட் பிளாக்கட்சியினரும் முக்குலத்தோர் சமூகத்தினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். அங்கு பதற்றம் நிலவுவதால்போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் கார்த்திக்குக்கடந்த இரு தினங்களாக ராமநாதபுரம், சிவகங்கைமாவட்டங்களில் கார்த்திக் தனது கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.ராமேஸ்வரம், மண்டபம், திருப்பாலைக்குடி, அரண்மனைப் புதூர், ஆர்.எஸ்.மங்கலம், இளையான்குடி ஆகியபகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கார்த்திக்கின் கூட்டங்களுக்கு முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானஇளைஞர்களும், பெண்களும் திரண்டு வந்திருந்தனர்.
இளையான்குடி தொகுதியில் அய்யம்பட்டி கிராஞ்சனை விலக்கு என்ற இடத்துக்கு கார்த்திக் இரவு 10.05 மணிக்குவந்தார். தேர்தல் விதிப்படி 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்க வேண்டும் என்பதால், அங்கு கார்த்திக்பிரச்சாரம் செய்ய போலீசார் தடை விதித்தனர்.
சைகை மொழியில் சும்மா கையை ஆட்டிவிட்டுப் போவதாக கார்த்திக் பேசிப் பார்த்தார். ஆனால், அதற்கும்போலீசார் அனுமதி தரவில்லை.
முதல்வருக்கு மட்டும் தான் அந்த அனுமதி தருவீர்களா என்று பார்வர்ட் பிளாக் தொண்டர்கள் கேட்கவே,அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நிலைமை மோசமாவதை உணர்ந்த கார்த்திக், பிரச்சனையைத் தவிர்க்க, தனது பிரச்சாரத்தை அங்கேயே ரத்துசெய்துவிட்டு மதுரைக்குக் கிளம்பிச் சென்றார்.
ஆனால், கார்த்திக் சைகை பிரச்சாரம் கூட செய்ய விடாமல் போலீசார் தடுத்துவிட்டதாக தகவல் பரவவே,இளையான்குடியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் (கார்த்திக் வருவதாக இருந்த பகுதிகள் இவை) பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
பார்வர்ட் பிளாக் கட்சியினரும், பொது மக்கள் (பெரும்பாலும் முக்குலத்தோர் சமூகத்தினர்) முக்கிய சாலைகளில்மறியல் போராட்டத்தில் குதித்தனர்.
இதனால் இரவில் ராமநாதபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்துசென்று பொது மக்களிடம் பேச்சு நடத்தினர். ஆனால் போலீசார் சொல்வதை மக்கள் கேட்க மறுத்தனர்.
நீண்ட நேரம் சமாதானப் பேச்சு நடத்திய பிறகே கலைந்து சென்றனர். இருப்பினும் அப் பகுதியில் இப்போதும்பதற்றம் நிலவுவதால் முன்னெச்சரிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்தாக நிருபர்களிடம் கார்த்திக் பேசுகையில்,
ஆண்டிப்பட்டியில் நாங்கள் நிறுத்திய வேட்பாளர் பொன்.முருகன் அதிமுகவிடம் பணம் வாங்கிக் கொண்டுகட்சிக்கு துரோகம் செய்துவிட்டார். அவர் செய்தது நம்பிக்கை துரோகம். இதனால் எங்கள் மக்களும்கழகத்தினரும் கொதித்துப் போய் உள்ளனர்.
இது போன்ற துரோகிகளை என்னால் முன்பே அடையாளம் காண முடியாமல் போய்விட்டது வேதனை தருகிறது.
திமுக தலைவர் கருணாநிதி எங்கள் கட்சி குறித்து தவறாக எதுவும் பேசவில்லை. அவர் ஒரு அரசியல் சாணக்கியர்மட்டுமல்ல, அரசியல் பண்பாடும் மிக்க தலைவர் என்பதை நிரூபித்துவிட்டார்.
தமிழகத்தில் எங்குமே திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய மாட்டோம். எங்கள் கொள்கையைச் சொல்லித் தான்ஓட்டு கேட்போம். அதிமுக ஆட்சியின் அவலம் குறித்துச் சொல்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications