கூத்தாண்டவர் கோவில் திருவிழா தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம் :
விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் உள்ள அரவாணிகளின் கோவிலானகூத்தாண்டவர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில்ஏராளமான அரவாணிகள் கலந்து கொண்டனர்.
ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா இந்தத் கோவிலில் மிக விமரிசையாககொண்டாடப்படும். இதில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான அரவாணிகள்கலந்து கொள்வர்.18 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக அரவாணிகளுக்குத்திருமண நிகழ்ச்சி, அரவாண் களப் பலி, பின்னர் அரவாணிகள் தாலி அறுப்புஆகியவை நடைபெறும்.
இந்தத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பூசாரி கண்ணன் சிறப்புப்பூஜைகளை நடத்தினார். மே 9ம் தேதி தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சிநடைபெறுகிறது. மறுநாள் தாலி அறுப்பு நடைபெறுகிறது.
அரவாணிகளைக் காண ஏராளமான இம்சை பிடித்த இளைஞர்களும் கூவாகத்தில்கூடுவது உண்டு.
இந்தத் திருவிழாவின்போது எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி தொடர்பாக பல்வேறுநிகழ்ச்சிகளை தமிழக அரசு இங்கு நடத்துவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications