தமிழகத்தில் கடும் வெப்பம்-காரணம் மாலா!!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மாலா புயல் சின்னம் காரணமாகவே சென்னை உள்ளிட்டகடலோர தமிழகத்தில் கடும் வெப்பம் நிலவி வருவதாக சென்னைவானிலைஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்துவருகிறது. வெப்பம் மிக அதிகமாக இருப்பதால், வியர்வை மழையில் மக்கள்குளித்து வருகிறார்கள்.

வரலாறு காணாத அளவுக்கு இந்த வெப்பம் இருப்பதால் மக்கள் தவித்துப்போயுள்ளனர்.

இந்த திடீர் வெப்பம் குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் விளக்கம்தந்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கிழக்கு வங்கக் கடலில் போர்ட் பிளேர் அருகே உருவாகியுள்ள மாலா என்ற புயல்,மியான்மர் நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக கடலோரத் தமிழகத்தில்வெப்பம் அதிகரித்து வருகிறது.

இந்தப் புயல் காரணமாக கடற்காற்று குறைந்து நிலக்காற்று அதிகம் வீசுகிறது.இதனால்தான் வெப்பம் அதிகமாக உள்ளது. இந்த நிலை இன்னும் 24 மணி நேரம்கழித்து படிப்படியாகக் குறையக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் வெப்பம் காரணமாக பகலில் மட்டுமல்லாது, இரவிலும் கூட மக்கள் பெரும்அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 100 டிகிரியைத்தாண்டித்தான் வெப்பநிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+