மீண்டும் மாநகராட்சி அலுவலகத்தில் கராத்தே!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

197 நாட்களுக்குப் பிறகு சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு துணை மேயர்கராத்தே தியாகராஜன் இன்று வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை நகரில் விளம்பர போர்டுகள் வைத்ததில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகசர்ச்சையில் சிக்கினார் கராத்தே தியாகராஜன். போயஸ் கார்டனுடனான கொடுக்கல்வாங்கல் பிரச்சனையும் ஏற்பட்டதால் அவரைப் பிடித்து உள்ளே போட முயற்சிநடந்தது.

இதைத் தொடர்ந்து ஆள் எஸ்கேப் ஆனார். பல்வேறு நாடுகளில் சுற்றித் திரிந்துவிட்டுசமீபத்தில் தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் தான் சென்னை திரும்பினார். காங்கிரஸ்கட்சியிலும் இணைந்துவிட்டார்.

இந் நிலையில் இன்று காலை திடீரென கராத்தே தியாகராஜன் சென்னை மாநகராட்சிஅலுவலகத்திற்கு வந்தார். 197 நாட்களுக்குப் பிறகு அவர் மாநகராட்சிஅலுவலகத்திற்கு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தனது அலுவலகத்திற்குச் சென்ற கராத்தே தியாகராஜன் அங்கு நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில்,

எதற்கெடுத்தாலும் நான் தான் நான்தான் என்று முன்னால் வந்து குதிக்கும் மாநகராட்சிஆணையர் விஜயக்குமார், சென்னை கே.கே.நகரில் 42 பேர் பரிதாபமாக இறந்தசம்பவம் குறித்து இதுவரை எதுவுமே பேசவில்லை. ஏன்?

சென்னையில் கிரிக்கெட் போட்டி நடக்கும்போதெல்லாம் பாதுகாப்புக்காக சவுக்குதடுப்பு அமைத்துத் தந்து, அத்தனை அதிகாரிகளும் ஓசியில் டிக்கெட், பாஸ் வாங்கிகிரிக்கெட் பார்க்கின்றனர்.

அப்போதெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருக்க முடியும் மாநகராட்சி அதிகாரிகளால்கே.கே.நகரில் வெள்ள நிவாரணம் பெற காத்திருந்த மக்களைக் காக்கமுன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியவில்லை. ஏன்?

இதற்கெல்லாம் ஆணையர்தான் பதில் சொல்ல வேண்டும். அவர் உடனடியாக தனதுஆணையர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார் கராத்தே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+