வாய்க்கு வந்தபடி பேசும் கருணாநிதி: திருமா
மங்களூர்:
தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயத்தில் திமுக தலைவர் கருணாநிதி வாய்க்குவந்தபடி பேசுகிறார் என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர்தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
மங்களூர் தொகுதிக்குட்பட்ட ராமநத்தம் என்ற இடத்தில் திருமாவளவன் பேசுகையில்,இது அதிமுக கூட்டணியின் வெற்றித் தொகுதி. தாயுள்ளத்தோடு நமக்கு 9தொகுதிகளை வழங்கியுள்ளார் ஜெயலலிதா. நம்மைத்தான் முதலில் அழைத்து 9தொகுதிகளைக் கொடுத்தார். அப்படிப்பட்ட ஜெயலலிதா மீண்டும் ஆட்சியில் அமரவேண்டும்.
நம்மை ஒழித்துக் கட்ட நினைத்தவர் கருணாநிதி. ஆனால் நம்மை அரவணைத்து,ஆதரவு கொடுத்து 9 தொகுதிகளை ஒதுக்கியவர் ஜெயலலிதா. இதனால் அடித்தட்டுமக்களிடையே பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
கருணாநிதிக்கு தோல்வி பயம் வந்து விட்டது. இதனால் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.கவர்ச்சி திட்டங்களை அறிவிக்கிறார். தனது வயதையும், பொறுப்பையும் மறந்து,தலைவர் என்பதையும் மறந்து பேசி வருகிறார்.
சிங்கங்கள், சிறுத்தைகள் என்று பேசி ஜாதி மோதலைத் தூண்ட முயற்சிக்கிறார்.
தலித் மக்களும் முக்குலத்தோர் மக்களும் ஜெயலலிதாவின் பக்கம் முழுமையாகஉள்ளனர். இது கருணாநிதிக்குப் பிடிக்கவில்லை. இதனால்தான் அவர் பிதற்றிவருகிறார்.இரு ஜாதிகளிடயே மோதலை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கிறார்.
வன்முறையை நம்பும் கருணாநதி கவர்ச்சி திட்டங்களை அறிவித்துப் பார்த்தார்.ஆனால் அது எடுபடவில்லை. உண்மையிலேயே அவருக்கு சமூக பார்வைஇருந்திருந்தால் கலர் டிவி தருவதாக கூறியிருக்க மாட்டார், கம்ப்யூட்டர் தருவதாககூறியிருப்பார்.
சமுதாயத்தை சீரழிக்கப் பார்க்கிறார் கருணாநிதி என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications