தமிழகம்-மேலும் 2 நாள் கடும் வெயில் நீடிக்கும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக கடலோரப் பகுதிகளில் மேலும் 2 நாட்களுக்கு கடும் வெப்பம் நீடிக்கும் என்றுவானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக கடும் வெயில் அடித்துவருகிறது. வரலாறு காணாத அளவுக்கு வெயில் அடித்து வருவதால் மக்கள் பெரும்அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த 3 நாட்களாக 107 முதல் 109 டிகிரி வரை வெயில் அடிக்கிறது. சென்னை நகரில்108 டிகிரி வெயில் கடந்த 2 நாட்களாக விளாசி வருகிறது. அனல் காற்றுடன் கடும்வெப்பம் நிலவுவதால் மக்கள் கடும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மாலா புயல் காரணமாக கடற் காற்று வீசாமல்தரைக்காற்று வீசி வருவதால்தான் இந்த கடும் வெப்பம் ஏற்பட்டுள்ளதாக வானிலைஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த 1979ம் ஆண்டுக்குப் பின்னர் இப்போதுதான் கடும் வெயில்அடித்து வருகிறது. இந்த வெப்ப நிலை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் எனவானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

மாலா புயல் பர்மா கடற்கரையை நெருங்கி வருவதாகவும் அது கரையைக் கடந்தபின்னர் வெயில் படிப்படியாக குறைந்து விடும் என்றும் வானிலை ஆராய்ச்சிநிலையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+