மக்கள் மத்தியில் பெரும் எழுச்சி: ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்:

திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.திமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் பெரும் எழுச்சி காணப்படுகிறது என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.திமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் பெரும் எழுச்சி காணப்படுகிறது என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டு பேசிய ஸ்டாலின்,

திமுகவின் தேர்தல் அறிக்கை இந்தியா பூராவும் இன்று விவாதப் பொருளாகியுள்ளது.அப்படி என்ன உள்ளது அந்த அறிக்கையில்?

2 ரூபாய்க்கு கிலோ அரிசி, இலவச கலர் டிவி, ஏழை, எளிய விவசாயிகளுக்கு 2ஏக்கர் நிலம் என மக்கள் நலத் திட்டங்கள் அதிகம் உள்ளன திமுக தேர்தல்அறிக்கையில்.

திமுகவின் தேர்தல் அறிக்கை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.தேர்தல் அறிக்கையே, திமுக அமைக்கவுள்ள அடுத்த அரசின் முதல் பட்ஜெட் ஆகப்போகிறது.

இந்த ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், நெசவாளர்கள், விவசாயிகள்,மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். யாரையும்விட்டுவைக்கவில்லை இந்த அரசு.

தோல்வி பயத்தின் காரணமாக ஜெயலலிதா இப்போது ஏகப்பட்ட அறிவிப்புகளைவெளியிட்டு வருகிறார். ஆனால் மக்கள் ஏமாற மாட்டார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்தால் வாரம் 2 முறை சத்துணவில் முட்டை வழங்கப்படும்.பறவைக் காய்ச்சல் பீதி காரணமாக போதிக்கப்பட்ட கோழிப் பண்ணையாளர்களுக்குமாநில அரசு எதையும் செய்யவில்லை. ஆனால் மத்திய அரசுதான் நிவாரணம்அளித்து வருகிறது.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பதையெல்லாம் நானும் செய்கிறேன் என்று பேசஆரம்பித்துவிட்டார் ஜெயலலிதா. அந்த அளவுக்கு பயம் வந்துவிட்டது. இப்பொதெல்லாம் திமுக தேர்தல்அறிக்கையைத் தான் அவர் தனது பிரச்சாரத்தில் படிக்கிறார் என்றார் ஸ்டாலின்.

ஜெவும் சசியும்: நெப்போலியன்சிதம்பரம தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாலகிருஷ்ணனைஆதரித்து திமுக நடிகர் நெப்போலியன் பிரசாரம் செய்தார். அவர் பேசுகையில்,

கடந்த ஐந்து வருடமாக நாட்டு மக்களைப் பற்றி ஜெயலலிதா சிந்தித்ததே இல்லை.அவருக்கு ஜனங்களை விட சசிகலா குறித்து சிந்திக்கவே நேரம் போதவில்லை.அதுதான் அவருக்கு முக்கியம்.

காசு கொடுத்து மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என நினைக்கிறார் ஜெயலலிதா.ஆனால் மக்கள் ஏமாற மாட்டார்கள்.

யார் எதைக் கொடுத்தாலும் தவறாமல் வாங்கிக் கொண்டு திமுக கூட்டணிவேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்.

சேது சமுத்திரத் திட்டம், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், தேசிய நெடுஞ்சாலைகள்,தமிழ் செம்மொழி என பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது திமுக அங்கம்வகிக்கும் மத்திய அரசு.

தமிழகத்தில் மட்டும் ரூ. 16,500 கோடி அளவுக்கு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள்அமல்படுத்தப்பட்டுள்ளன. வேறு எந்த மாநிலத்திலும் இப்படி நடந்ததில்லை.எல்லாவற்றிற்கும் திமுக மத்திய அமைச்சர்களும், கூட்டணிக் கட்சியின் பிற தமிழகஅமைச்சர்களுமே காரணம் என்றார் நெப்போலியன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+