விதி மீறல்: மதுரை திமுக மேயர் மீது வழக்கு
மதுரை:
தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில், முன் அனுமதி பெறாமல் பிரசாரத்தில்ஈடுபட்ட மதுரை மாநகராட்சி திமுக மேயர் செ.ராமச்சந்திரன் மீது தேர்தல் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து மேயர் செ.ராமச்சந்திரன் மற்றும் திமுகவினர்பிரசாரத்தில் ஈடுபட்டனர். பெத்தானியாபுரம் பகுதியில் அவர்கள் பிரசாரத்தில்ஈடுபட்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த தொகுதி தேர்தல் பார்வையாளர் அமீர்ஜான், அனுமதிபெறாமல் ராமச்சந்திரனும், திமுகவினரும் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதை அறிந்தனர்.
இதைத் தொடர்ந்து செ.ராமச்சந்திரன் உள்ளிட்ட திமுகவினர் மீது வழக்குப் பதிவுசெய்ய போலீஸாருக்கு அவர் உத்தரவிட்டார்.
இதன் பேரில் மேயர் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
திருமணமான பாஜக பெண் கவுனசிலருடன் திமுக மேயர் செ.ராமச்சந்திரன் தனதுகாரில் ஜாலியாக ஊர் சுற்றியபோது, கார் விபத்துக்குள்ளாகி, அதில் அந்தப் பெண்பலியானது நினைவுகூறத்தக்கது.
அந்த வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்துள்ள ராமச்சந்திரன் மீது இப்போதுஇன்னொரு வழக்கு. நல்ல மேயர்...












Click it and Unblock the Notifications