1 ரூபாய் போன் திட்டத்தை நிறுத்த சதி-தயாநிதி

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

1 ரூபாய்க்கு இந்தியா முழுவதும் பேசும் எனது திட்டத்தை தடுத்து நிறுத்தும்வகையிலேயே டாடா விவகாரத்தை கிளப்பி சதித் திட்டம் தீட்டியுள்ளார்கள் என்றுமத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

நான் கொண்டு வந்துள்ள 1 ரூபாய்க்கு இந்தியா முழுவதும் பேசும் திட்டத்தை தடுத்துநறுத்தவே டாடா டிடிஎச் விவகாரத்தில் எனது பெயரை இழுத்து விட்டுள்ளார்கள்.

1 ரூபாய் திட்டத்தினால் தங்களது தொழிலில் லாபம் குறைந்து விடும் என்று அஞ்சும்சில நிறுவனங்கள் தங்களிடம் உள்ள பண பலத்தை வைத்து சதித் திட்டம் தீட்டி 1ரூபாய் திட்டத்தை தடுத்து நிறுத்த சதி செய்கிறார்கள்.

யார் சதி செய்தாலும் 1 ரூபாய் திட்டம் தொடரும் என்பதை அறிவிக்கிறேன்.

டிடிஎச் விவகாரத்தில் டாடா நிறுவனம் என் மீது நேரடியாக குற்றம் சாட்டவில்லை.ஆனால் வைகோதான் ரொம்ப வேகமாக பேசி வருகிறார். இதற்கு ஒரு பின்னணிஉள்ளதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இந்தியன் டொபாக்கோ கம்பெனி என்ற நிறுவனம் எந்த அரசியல்வாதிக்கும் ஏஜென்சிதருவதில்லை. ஆனால் வைகோவின் மகனுக்குத்தான் அந்த நிறுவனம் தமிழகத்தில்ஏஜென்சி உரிமம் கொடுத்துள்ளது.

இதேபோல டாடா நிறுவனத்தின் கார்களுக்கான தென் மாநில ஏஜென்சியை எடுக்கவைகோவின் மகன் முயற்சித்து வருகிறார். இதற்குப் பலம் ஊட்டவே, டாடாவின்ஏஜென்ட்டாக மாறி வைகோ டிடிஎச் விவகாரத்தை கிளப்பி வருகிறார் என்றார்தயாநிதி மாறன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+