பொய் சொல்வதை ஜெ நிறுத்தனும்- ஈவிகேஎஸ்
மதுரை:
மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து பொய்யாகன குற்றச்சாட்டுக்களைகூறுவதை ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய இணையமைச்சர்ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைச்சர் இளங்கோவன் இன்று பிரசாரம்மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,மத்தியில் உள்ள 13 தமிழக அமைச்சர்கள் குறித்தும் முதல்வர் ஜெயலலிதாபொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். அதை முதலில் அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
சத்தியமங்கலம் - சாம்ராஜ் நகர் இடையிலான ரயில் பாதைத் திட்டத்திற்குத்தடைக்கல்லாக இருக்கிறார் ஜெயலலிதா. இந்தத் திட்டம் நிறைவேறுவதில் அவருக்குவிருப்பம் இல்லை. திட்டம் நிறைவேறினால் எங்கே எம்.பி. என்ற முறையில்எனக்கும், காங்கிரஸ் அரசுக்கும், திமுக கூட்டணிக்கும் பெயர் கிடைத்து விடுமோஎன்று அவர் பயப்படுகிறார்.
ஜெயலிலதாவின் ஐந்து ஆண்டு கால ஆணவ, அடாவடி ஆட்சிக்கு வருகிற தேர்தலில்மக்கள் முடிவு கட்ட வேண்டும் என்றார் இளங்கோவன்.
முன்னதாக சத்தியமங்கலத்தில் பேசிய இளங்கோவன்,
திமுகவைப் பார்த்து குடும்ப அரசியல் குடும்ப அரசியல் என்று புலம்புகிறார்ஜெயலலிதா. ஒரு சிலருக்கு குடும்பம், குட்டி அமையாவிட்டால் நாம் எப்படிபொறுப்பேற்க முடியும்.
5 வருடமாக மக்களை வாட்டி வதைத்த ஜெயலலிதா, யானைகளை மட்டும் ஊட்டிக்குஅனுப்பி வைத்து குஷிப்படுத்தினார். யானையைப் போலவே தனக்கு உருவ ஒற்றுமைஇருப்பதாலோ என்னவோ.
இந்தியா மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில்மந்திரிமார்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள். ஜெயலலிதாவைப் பார்த்தால்கன்னத்தில் அடித்துக் கொள்வது, சாஷ்டாங்கமாக காலில் விழுவது. என்ன இது?கேவலமாக இல்லை..?
இப்போது ஜெயலலிதாவின் கூட்டங்களில் எல்லாம் முன்னால் ஒருவர் பெட்ருமாக்ஸ்லைட்டைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறார். இவரை எங்கேயே பார்த்த மாதிரி இருக்கேஎன்று உற்று கவனித்தால் அட நம்ம செங்கோட்டையன்.
இவரை மாதிரி கேவலமான ஆட்களுக்கெல்லாம் ஓட்டு போட்டு உங்கள் ஓட்டின்மதிப்பை கெடுத்துவிடாதீர்கள்.
சோனியாவைப் பார்த்து கேள்வி கேட்கிற ஜெயலலிதாவைப் பார்த்துக் கேட்கிறேன்.அவரைப் பார்த்து விரல் நீட்டி கேள்வி கேட்க உனக்கு ஏதாவது தகுதி இருக்கிறதா?
அவர் யார், நீ யார். நீ ஒரு நடிகை.. நீ முதல்வராகலாம் என்றால் நாங்கள் நாடாளக்கூடாதா?.
வைகோ இப்போது அலி பாபா குகையில் நுழைந்த திருடன் நிலையில் இருக்கிறார்.உள்ளே போய்விட்டார், வெளியே வர வழி தெரியவில்லை. ஜெயலலிதாவுடன்போய் சேர்ந்து கொஞ்சம் நஞ்சம் சேர்த்து வைத்திருந்த மரியாதையும் மக்களின்நல்லெண்ணத்தையும் கெடுத்து குட்டிச் சுவராக்கிக் கொண்டுவிட்டார் வைகோ.
திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பதை எல்லாம் தினமும் தனித்தனியாகதன் அறிவிப்பு மாதிரி வெளியிட ஆரம்பித்துள்ளார் ஜெயலலிதா.
அதற்கு பதிலாக, நான் திமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு தோல்வி உறுதியாகிவிட்டது தெரிகிறது. இதனால் நான்அரசியலை விட்டே ஓடுகிறேன். இனி இந்தப் பக்கமே வர மாட்டேன் என்றுசொல்லிவிட்டு ஜெயலலிதா ஓடினால், நானே ஓடிப் போய் அவருக்கு ஒருமாலையையும் போட்டு அனுப்பி வைத்துவிட்டு வருவேன்.
ஆட்சியா நடத்தினார் ஜெயலலிதா?. இங்கே கூடியிருக்கும் கூட்டத்தினரைப் பார்த்துகேட்கிறேன், தமிழக அமைச்சர்களின் பெயர்களை உங்களில் யாராவது ஒருவர் வந்துசொன்னால் இங்கேயே ஆயிரம் ரூபாய் பரிசு தருகிறேன்.
என்னிடம் இல்லாவிட்டாலும் இங்கே மேடையில் இருப்பவர்களிடம் வாங்கியாவதுதருகிறேன்.
பல மாநில முதல்வர்களும் டெல்லிக்கு வருகிறார்கள். பெரிய மந்திரிகளை, என்னைமாதிரி குட்டி மந்திரிகளை சந்தித்து எங்கள் மாநிலத்துக்கு இந்தத் திட்டம் வேண்டும்என்று உரிமையோடு பேசி வாங்கிச் செல்கிறார்கள்.
அவர்களுக்கு மக்கள் மீது அக்கறை இருப்பதால் அப்படி செய்கிறார்கள்.ஜெயலலிதாவுக்கு எதுக்கு அந்த அக்கறையெல்லம். சசிகலாவுக்கு சாராய பேக்டரிவைத்துத் தந்து அதில் கொள்ளை அடிக்கவே இவர்களுக்கு நேரம் போதவில்லையேஎன்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications