காமராஜர், எம்ஜிஆர், ஜெ அண்ட் விஜய்காந்த்!

Subscribe to Oneindia Tamil

விருத்தாச்சலம்:

பெருந்தலைவர் காமராஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் மட்டும் தங்களுக்குச்சம்பந்தம் இல்லாத தொகுதிகளில் போட்டியிடலாம், நான் விருத்தாச்சலத்தில்போடடியிட்டால் தவறா என்று நடிகர் விஜயகாந்த் கேட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து தேசிய முற்போக்கு திராவிட கழகவேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி பிரசாரம் செய்த விஜயகாந்த், கட்டக் கடைசியாகஇப்போது தான் போட்டியிடும் விருத்தாச்சலம் தொகுதியில் தற்போதுமுகாமிட்டுள்ளார்.

பிரசாரத்திற்கு முன் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திமுக, அதிமுகவுக்குமாற்றுக் கட்சியாக தேமுதிக விளங்கவில்லை. மாறாக மாற்று சக்தியாகமாறியுள்ளோம்.

பிரசாரத்தின்போது எங்களுக்கு எத்தனையோ இடையூறுகள். மின் இணைப்பைத்துண்டிப்பது, பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பது, கொடிகள், பேனர்களை அகற்றுவதுஎன இடைஞ்சல் செய்கிறார்கள். ஆனால் நான் அதைப் பார்த்து பயப்பட மாட்டேன்.

வெளியூர்க்காரனான நான் விருத்தாசலத்தில் போட்டியிடலாமா என்று கேட்பதுஅர்த்தமற்றது. பெருந்தலைவர் காமராஜர் குடியாத்தத்தில் போட்டியிடவில்லையா?எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆண்டிப்பட்டியில் போட்டியிடவில்லையா.அதேபோலத்தான் விருத்தாச்சலத்தில் நான் போட்டியிடுகிறேன்.

விருத்தாச்சலத்தில் எனக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர். இது வன்னியர் கோட்டைஎன்பது குறித்து நான் கவலைப்படவில்லை. நான் ஜாதி, மதம் பார்ப்பது இல்லை.மக்களை மட்டுமே பார்க்கிறேன்.

விருத்தாச்சலத்தில் நிறைய கிராமங்கள் உள்ளன. ஆனால் அத்தனையும்முன்னேறாமல், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருக்கின்றன. அவற்றைமுன்னேற்றுவதே எனது முக்கிய நோக்கம்.

நான் இங்கு எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்பது குறித்துக்கவலைப்படவில்லை. நிச்சயம் நான் வெற்றி பெறுவேன். அதில் எனக்கு நிறையநம்பிக்கை உள்ளது.

தேமுதிக போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும். எங்குபார்த்தாலும் தேமுதிகவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மக்கள் எங்களைபுத்துணர்ச்சியோடு ஆதரிக்கிறார்கள். எங்களுக்கு எந்தவித உள்நோக்கம் இல்லை.பழிவாங்கும் நினைப்பும் இல்லை என்றார் விஜயகாந்த்.

என்னை மட்டும் நம்புங்கள்:

முன்னதாக நேற்று வால்பாறை தொகுதி தேமுதிக வேட்பாளர் முருகராஜை ஆதரித்துவிஜயகாந்த் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,

எந்தக் கட்சிக்கும் இல்லாத தில் நமக்கு மட்டுமே உள்ளது. அதனால்தான் 234தொகுதிகளிலும் நாம் தனித்துப் போட்டியிடுகிறோம். நமக்குக் கிடைத்துள்ள சின்னம்கொட்டும் முரசு. வெற்றி முரசு கொட்டப் போவதை முன்னறிவிக்கும் விதமாககொட்டும் முரசு சின்னம் கிடைத்துள்ளது.

இதுவரை அதிமுகவும், திமுகவும் கிட்டத்தட்ட 40 வருடங்கள் இந்த மாநிலத்தைஆண்டு விட்டன. ஆனால் மக்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. எனவே இந்த முறைஇந்தக் கட்சிகளை நிராகரியுங்கள். இவர்கள் இருவரும் தமிழகத்தை சுரண்டியதுபோதும்.

அவர்களை நம்பி மக்கள் ஏமாந்தது போதும். இரு கட்சிகளையும் மக்கள் நம்பக்கூடாது. என்னை மட்டும், எனது கட்சியை மட்டும் நம்பி எங்களுக்கு வாக்களியுங்கள்.

கடந்த 35 ஆண்டுகளாக பல வழிகளில் தமிழக மக்களுக்காக பாடுபட்டு வருகிறேன்.

நான்தான் முதலில் 15 கிலோ அரிசி இலவசம் என்று அறிவித்தேன். அதைப் பிடித்துக்கொண்ட திமுகவுகம், அதிமுகவும் இப்போது மாறி மாறி இலவச அரிசி, கிலோ அரிசி2 ரூபாய் என்று அறிவித்து வருகின்றன என்றார் விஜயகாந்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+