தெளிவான தீர்ப்புக்கு மக்கள் தயார்: கி.வீரமணி
சென்னை:
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் உதயசூரியன் சின்னத்திற்கான பொத்தானைஅழுத்துங்கள், உங்கள் வீட்டில் விளக்கு எரியும் என்று திராவிடர் கழக தலைவர்கி.வீரமணி கூறியுள்ளார்.
தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜாவை ஆதரித்து கி.வீரமணிபிரசாரம் செய்தார். அப்போது,தெளிவான ஒரு தீர்ப்புக்கு மக்கள் தயாராகி விட்டார்கள். கன்னியாகுமரி முதல்திருத்தணி வரை மக்கள் மனதில் ஒரே எண்ணம்தான். அந்த எண்ணம் மே 11ம் தேதிவெட்ட வெளிச்சமாகும், கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி அமையும். அதில்சந்தேகம் இல்லை.
வாக்காள பெருமக்களே வருகிற 8ம் தேதி வாக்குச் சாவடிக்கு மறக்காமல்செல்லுங்கள். அங்கு வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில்உதயசூரியன் உள்ள பொத்தானை அழுத்தங்கள்.
அதில் விளக்கு எரிந்தால் உங்கள் வீட்டில் விளக்கு எரியும், நாட்டின் விளக்கும்எரியும், இருட்டும் நீங்கும். அதை நீங்கள் செய்ய மறந்தால் அடுத்து ஐந்து ஆண்டுகள்நீங்கள் இருளிலேயே உழல வேண்டியதுதான் என்றார் வீரமணி.












Click it and Unblock the Notifications