தேமுதிக பெண் வேட்பாளர் மீது கொலை வெறித் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு தொகுதி தேசிய முற்போக்கு திராவிட கழக பெண் வேட்பாளர் மஞ்சுளாமீது அதிமுவைச் சேர்ந்த கும்பல் கொலை வெறித் தாக்குதல் நடத்தியது. இதில்மஞ்சுளா படுகாயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் மீது போலீஸில் புகார்செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு தொகுதி தேதிக வேட்பாளர் மஞ்சுளா. இத்தொகுதியில் அதிமுகசார்பில் ஆறுமுகம் களத்தில் உள்ளார். இரு வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில்ஈடுபட்டு வருகின்றனர்.

இந் நிலையில், நத்தம் பகுதியில் மஞ்சுளா வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார்.அப்போது ஆறுமுகம் தனது ஆதரவாளர்களோடு அங்கு வந்தார்.

ஒரே நேரத்தில் இரு கட்சியினரும் பிரசாரம் செய்தால் பிரச்சினை ஏற்படுமோ எனபோலீஸார் பயந்தனர். இதைத் தொடர்ந்து நான் அரை மணி நேரத்தில் பிரசாரத்தைமுடித்து விடுகிறேன், நீங்கள் அதுவரை வேறு பகுதியில் பிரசாரம் செய்யுங்கள் என்றுமஞ்சுளாவிடம் ஆறுமுகம் கூறினார்.

இதை ஏற்ற மஞ்சுளா அங்கிருந்து வேறு பகுதிக்குச் சென்றார்.

சரியாக அரை மணி நேரம் கழித்து அவர் நத்தம் பகுதிக்கு வந்தார். அப்போதும்ஆறுமுகம் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதையடுத்து அவரிடம் சென்ற மஞ்சுளா, நான் சொன்னபடி வந்து விட்டேன். நீங்கள்உங்களது பிரசாரத்தை முடியுங்கள் என்றார்.

இதைக் கேட்டதும் ஆறுமுகம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதெல்லாம் முடியாது.நாங்கள் பிரசாரத்தைத் தொடருவோம் என்று கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இருகட்சியனருக்கும் இடையே வாக்குவாதமும், மோதலும் ஏற்பட்டுள்ளது.

இதில் மஞ்சுளா மீது அதிமுகவினர் கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்தாக்கப்பட்டார்.

கை, கால்களில் காயத்துடன் உயிர் தப்பிய மஞ்சுளா செங்கல்பட்டு போலீஸ்நிலையத்திற்கு தப்பி ஓடி தஞ்சமடைந்தார். தன்னை அதிமுக மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த 9 பேர் தாக்கியதாக போலீஸில் மஞ்சுளா புகார்கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தேமுதிகவினரிடையே பெரும கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்:

இதற்கிடையே தேசியமுற்போக்கு திராவிட கழகத்தின் கொடிகள், பேனர்களை மட்டும் அகற்றச் சொல்லி போலீஸார் மிரட்டி வருவதாக தேர்தல்ஆணையத்தில் அக்கட்சி புகார் செய்துள்ளது.

ராயபுரம் தொகுதியில் தேமுதிக வேட்பாளராகப் போட்டியிடுபவர் பாபு. இத்தொகுதியில் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளார். இத்தொகுதியின்தற்போதைய எம்.எல்.ஏவும், அமைச்சருமான ஜெயக்குமார் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் ராயபுரம் மனோபோட்டியிடுகிறார்.

அதிமுகவுக்கு இணையாக தேமுதிகவினர் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதால் அதிமுக தரப்பிலிருந்து பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாகஏற்கனவே தேமுதிகவினர் புகார் கூறி வருகின்றனர்.

இந் நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு சாதகமாக நடந்து கொள்வதாக தேமுதிக கூறியுள்ளது. சமீபத்தில் இத்தொகுதியில் விஜயகாந்த்பிரசாரம் மேற்கொண்டிருந்தபோது தேமுதிகவின் கொடிகள், பேனர்களை அகற்றச் சொல்லி போலீஸார் வற்புறுத்தினர்.

இதனால் கோபமடைந்த விஜயகாந்த் நேராக கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று அங்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இந் நிலையில் மறுபடியும்இதே தொகுதியில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

தேமுதிகவினர் கட்டியுள்ள கொடிகள், பேனர்களை அகற்ற வேண்டும் என்று போலீஸார் அக் கட்சியினரை கட்டாயப்படுத்தினர்.

இதுகுறித்து தொகுதி வேட்பாளர் பாபு கூறுகையில், அனுமதி கொடுக்கப்பட்ட இடங்களிலதான் நாங்கள் போஸ்டர்கள் ஒட்டுகிறோம், பேனர்கட்டுகிறோம். ஆனால் போலீஸார் எங்களை மட்டும் குறி வைத்து பேனர்கள், கொடிகளை, போஸ்டர்களை அகற்றி வருகின்றனர்.

காங்கிரஸை மிரட்டுவதில்லை. எங்களை மட்டுமே குறி வைக்கின்றனர். மிரட்டுகிறார்கள். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளோம்என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+