நாளை பிரதமர் தமிழகத்தில் பிரச்சாரம்:இன்று முதல் ஜெ. சென்னையில் பிரசாரம்
சென்னை:
![]() |
| கரூரில் காலியான சாலைகளில் ஜெயலலிதாவின் வேன் |
தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து முடித்துள்ள முதல்வர் ஜெயலலிதாஇன்று முதல் சென்னை நகர தொகுதிகளில் சுற்றுப்பயணம் ஓட்டு வேட்டையாடுகிறார்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த மார்ச் 31ம் தேதி தனது பிரசாரத்தைத் தொடங்கினார்.சென்னையிலிருந்து தொடங்கி தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களிலும் தீவிரசுற்றுப்பயணம் செய்து ஓட்டு வேட்டையாடினார்.
![]() |
| ஜெவின் வேன் முன்னால் பம்மி உட்கார்ந்துள்ள வேட்பாளர்கள் |
வேன் மூலமாக அவரது பிரச்சாரப் பயணத்தில் கூட்டம் குறையத்தொடங்கியதையடுத்து வேனில் செல்வதைத் தவிர்த்து ஹெலிகாப்டரில் செல்லஆரம்பித்தார்.
நேற்றிரவு இரவு கிருஷ்ணகிரியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை திரும்பினார்.
![]() |
| ஹெலிகாப்டரில் இருந்து வேனுக்கு மாறிய ஜெவின் வேன் முன்னால் காலில் செருப்பு கூட இல்லாமல் ஓடும் வேட்பாளர் |
இன்று முதல் 6ம் தேதி வரை அவர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்மாவட்டங்களுக்குட்பட்ட தொகுதிகளில் இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
சைதாப்பேட்டையில் இன்று தனது பிரசாரத்தைத் தொடங்கி கோடம்பாக்கம், பனகல்பூங்கா, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, புளியந்தோப்பு, சென்டிரல் ரயில்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக வலம் வந்து தீவிரப் பிரசாரம்செய்கிறார்.
![]() |
| ஜெயலிலதாவுடன் வேனில் சசிகலா |
பல்வேறு இடங்களில் பேசுகிறார். புளியந்தோப்பு ஜெயின் கல்யாண மண்டபம்அருகே தனது முதல் நாள் பிரசாரத்தை முடித்துக் கொள்கிறார்.
நாளை காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்யும்ஜெயலலிதா தொடர்ந்து 6ம் தேதி வரை சென்னை மாநகர் மற்றும் புறநகருக்குள் வரும்தொகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.
![]() |
| ஜெயலலிதாவின் வேன் நிற்கும் தரையை தொட்டுக் கும்பிடும் மந்திரி ஓ.பன்னீர்செல்வம் |
திருச்சி, சென்னையில் மன்மோகன்:
பிரதமர் மன்மோகன் சிங் நாளை திருச்சி. சென்னையில் திமுக கூட்டணியின் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களில் பேசுகிறார்.
ாளை மாலை டெல்லியிலிருந்து சென்னை வரும் அவர் அங்கிருந்து திருச்சி சென்று பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் சென்னை திரும்பி தீவுத் திடலில்நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். இக் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்களும்பங்கேற்கின்றனர்.

















Click it and Unblock the Notifications