சென்னையை ஷாங்காய், ஹாங்காங், சிங்கப்பூர் ஆக்குவேன்: ஜெ
சென்னை:
உலகின் அதி நவீன நகரங்களான ஷாங்காய், சிங்கப்பூர், ஹாங்காங் போல சென்னைமாநகரும் மேம்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
மாவட்ட சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டுள்ள ஜெயலலிதா புதன்கிழமை முதல்சென்னை நகர தொகுதிகளில் தனது பிரசாரத்தைத் தொடங்கினார். சைதாப்பேட்டைபனகல் மாளிகை அருகே தனது பிரசாரத்தைத் தொடங்கிய ஜெயலலிதா தென்சென்னை தொகுதிகளை வலம் வந்து ஓட்டுக் கேட்டார்.திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதியிலும் ஜெயலலிதாபிரசாரம் செய்தார். ஜெயலலிதா பேசுகையில்,
சென்னை மாநகரை தென்னகத்தின் முதன்மை நகராகவும், இந்தியாவின் கிழக்குவாசலாகவும் மாற்றியிருக்கிறோம். சென்னை நகரில் நிலவிய கடும் குடிநீர்ப்பற்றாக்குறையை சமாளிக்க தொலை தூரங்களில் இருந்து லாரிகளில் குடிநீர் கொண்டுவந்தோம்.
புதிய வீராணம் திட்டம் நிறைவேற்றப்பட்டு சென்னை நகரின் தாகம் தணிக்கப்பட்டது.இப்போது தவித்த வாய்களுக்கு மட்டுமா தண்ணீர் கிடைக்கிறது, இத்திட்டத்தை தடுத்தவாய்களுக்கும் சேர்த்துத்தானே தண்ணீர் கிடைக்கிறது.
சென்னை நகரில் அனைத்து கட்டுமான வசதிகளையும் உருவாக்கிட ரூ. 18,000 கோடிசெலவிலான சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன்.
இதன் மூலம் என்றென்றும் சென்னை என்ற திட்டத்தின் மூலம் கட்டமைப்பில் சிறந்தநகராகவும், பூங்காக்கள் நிறைந்த பசுமை நகராகவும் சென்னை விளங்குகிறது.
தொழில் வளர்ச்சியிலும் சென்னை சிறந்து விளங்குகிறது. பழைய மகாபலிபுரம்சாலையில் ரூ. 120 கோடி செலவில் 6 வழித் தட சாலைப் பணிகள் வேகமாக நடந்துவருகின்றன.
நோகியா, ஹூண்டாய், பிஎம்டபிள்யூ உள்ளிடட் பல்வேறு சர்வதேச தொழில்நிறுவனங்கள் சென்னையைத் தேடி வந்துள்ளன.
மழை, வெள்ளத்தால் சென்னை நகரம் பாதிக்கப்பட்டபோது அதை உடனடியாகசமாளித்து, மக்களின் துயர் துடைத்தோம். வரலாறு காணாத அளவில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
சென்னையைச் சுற்றிலும் 2 துணை நகரங்கள் அமைக்கப்படும். இன்னும் 10ஆண்டுகளில் 35,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஷாங்காய், ஹாங்காங், சிங்கப்பூர்போன்ற நகரங்களுக்கு இணையாக சென்னை நகரும் தரம் உயர்த்தப்படும் என்றார்ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications