கருத்துக் கணிப்பெல்லாம் பொய்- சரத்குமார்
கோவை:
ஸ்டாலினுக்கு பேசவும் தெரியாது, அறிவும் கிடையாது. தயாநிதிக்கு விளம்பரத்துக்கு போய் கொடுக்க மட்டுமேதெரியும் என நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
முன்னதாக பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் பிரச்சாரம் செய்த சரத்,தமிழக மக்களுக்காக பணிகளைச் செய்ய வேண்டிய நான் கடந்த 8 வருடமாக சதித் திட்டம் தீட்டும் திமுகவில்இருந்துவிட்டேன். என் 8 வருடன் அரசியல் பயணம் வீணாகிவிட்டது. திமுகவை தமிழக வரைபடத்தில் இருந்தேதூக்கி எறிய வேண்டும்.
கலைஞருக்கு அரசியலில் பேசத் தெரியாது. கவிதைகள் எழுதி வீணடிக்கத் தான் தெரியும்.
இப்போது அம்மாவுடன் இருக்கிறேன். இது நான் செய்த பாக்கியம். தமிழகத்தை ஆள தகுதி உள்ள ஒரே தலைவிபுரட்சித் தலைவி மட்டுமே.
ஸ்டாலினுக்கு பேசவும் தெரியாது, அறிவும் கிடையாது. தயாநிதிக்கு விளம்பரத்துக்கு போய் கொடுக்க மட்டுமேதெரியும். என் குடும்பத்தைப் பற்றி கருணாநிதி தரக்குறைவாகப் பேசியுள்ளார்.
ஒவ்வொர குடும்பத்திலும் பிரச்சனை இருக்கத்தான் செய்யும். ஆண்டிப்பட்டியில் ராதிகாவுடன் சென்று ஓட்டுகேட்கவுள்ளேன். திமுக ஜெயிக்கும் என்று சொல்லும் கருத்துக் கணிப்புகள் பொய்யானவை என்றார்.
சரத்தை தடுத்த பெண்கள்:
கோவையில் தனது ரசிகர் மன்றத்தின் மாவட்டச் செயலாளர் வீட்டுக்குச் சென்ற சரத்குமாரை அந்தப் பகுதிபெண்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
கோவை மேற்கு தொகுதியில் அதிமுகவுக்குப் பிரச்சாரம் செய்த சரத்குமார், காந்தி பார்க்கில் உள்ள தனது ரசிகர்மன்றத்தின் மாவட்டச் செயலாளர் வீட்டுக்குச் செல்ல முயன்றார்.
ஆனால், அவரை வழியிலேயே நிறுத்தினார் மாவட்டச் செயலாளரின் தாயார் தனலட்சுமி. சுமார் 50பெண்களுடன் திரண்டு நின்ற தனலட்சுமி, நீங்கள் உங்கள் சொந்த காரணத்துக்காக அதிமுகவுக்குப்போய்விட்டீர்கள்.
இங்குள்ள உங்கள் மன்றத்தை கலைத்துவிட்டோம். துரோகிகளை என் வீட்டுக்குள் விட மாட்டேன் என்றார்.
இதனால் அதிர்ந்து போன சரத்குமார் அவரிடம் சமாதானமாகப் பேசிப் பார்த்தார். ஆனால், அந்தப் பெண்கள்,நீங்கள் இங்கே வரக் கூடாது என்று கூறி சாலையை மறித்தனர். இதையடுத்து அதிமுகவினருடன் திரும்பிச்சென்றார் குமார்.
இச் சம்பவத்தால் அப் பகுதியில் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications