3,000 வேணுமா, 15,000 வேணுமா?-ஸ்டாலின்
திண்டுக்கல்:
ஜெயலலிதா கொடுக்கப் போகும் ரூ. 3,000 மதிப்பிலான அரை பவுன் தங்கத் தாலிபெரிதா அல்லது திருமண உதவித் திட்டத்தின் மூலம் திமுக கொடுக்கப் போகும் ரூ.15,000 பெரிதா என்பதை மக்கள் யோசித்துப் பார்க்க வேண்டும் என திமுக துணைப்பொதுச் செயலாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆண்டிஅம்பலத்தை ஆதரித்து ஸ்டாலின் கோபால்பட்டி என்ற கிராமத்தில் பிரசாரம் செய்தார்.அவர் பேசுகையில்,அரை பவுன் தங்கத் தாலி இலவசமாக தரப் போவதாக ஜெயலலிதா கூறுகிறார். அரைபவுன் தங்கத் தாலியின் மதிப்பு எவ்வளவு? ரூ. 3,000. ஆனால் திமுக மீண்டும்ஆட்சிக்கு வந்தால், ஜெயலலிதா அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திருமண உதவித்திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம்.
அத்திட்டத்தின் மூலம் ஏற்கனவே கொடுக்கப்பட்ட ரூ. 10,000க்குப் பதில் ரூ. 15,000கொடுப்போம்.
இப்போது சொல்லுங்கள் ஜெயலலிதா கொடுக்கப் போகும் 3000 பெரிதா, நாங்கள்கொடுக்கப் போகும் 15,000 பெரிதா.? இதை யோசித்துப் பார்த்து வருகிற தேர்தலில்உங்களது வாக்குகளை செலுத்துங்கள்.
திமுக ஆட்சிக் காலத்தில் அதாவது கடந்த 1986ம் ஆண்டு மூவலூர் ராமாமிர்தம்அம்மையார் பெயரில் பெண்கள் திருமண உதவித் திடடம் கொண்டு வரப்பட்டது.ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் இந்தத் திட்டத்தை ரத்து செய்து விட்டார்.
பெண்கள் திருமண உதவித் திட்டத்தை ரத்து செய்த ஜெயலலிதா இப்போது இலவசத்தங்கத் தாலி தருவதாக கூறுவது ஏமாற்று வேலையாகும். சாலைப் பணியாளர்கள் 86பேரின் மனைவியர்களின் தாலிகளை அறுத்த ஜெயலலிதா, பெண்களுக்கு தங்கத் தாலிதரப் போவதாக கூறுவது மோசடியான அறிவிப்பு.
இப்படிப்பட்ட மோசமான, அடாவடியான ஆட்சி மீண்டும் தேவையா என்பதைமக்கள் யோசித்துப் பார்க்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications