தமிழ் உணர்வில்லாத விஜயகாந்த்: டி.ஆர்
முகையூர்:
தமிழ் உணர்வு சற்றும் இல்லாத நடிகர் விஜயகாந்த்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும்என்று இயக்குனர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
மகையூர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளரை ஆதரித்து விஜயடி.ராஜேந்தர் பேசுகையில்,விஜயகாந்த் 6 மாதத்திற்கு முன்புதான் கட்சி ஆரம்பித்தார். ஆனால் உடனேமுதல்வராகி விட வேண்டும் என்று துடிக்கிறார்.
தமிழை சரியாக உச்சரிக்கத் தெரியுமா விஜயகாந்த்துக்கு? தமிழை ஒழுங்காக பேசத்தெரியாத விஜயகாந்த் எப்படி தமிழக மக்களுக்காக பாடுபடப் போகிறார்?
15 கிலோ அரிசி இலவசமாகத் தருகிறாராம், வீட்டுக்கு பலசரக்கு வாங்க 500 ரூபாய்தருவாராம். இதெல்லாம் விஜயகாந்த் கட்சியின் தேர்தல் அறிக்கையில்சொல்லப்பட்டுள்ளது.
இதை நிறைவேற்ற வேண்டுமானால் விஜய்காந்த் கள்ள நோட்டுதான் அடிக்கவேண்டும்.
தமிழ் உணர்வு சற்றும் இல்லாதவர் விஜயகாந்த். அவரது கட்சியை மக்கள் புறக்கணிக்கவேண்டும். பதவி ஒன்றையே குறி வைத்து வெறி பிடித்து அலைகிறார் விஜயகாந்த்.
இவரது பேச்சுக்கள் மக்கள் மத்தியில் எடுபடாது என்றார் ராஜேந்தர்.












Click it and Unblock the Notifications