அமெரிக்க விசா கோருவோர் 30% அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
ஜலந்தர்:
இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல விசா கோரி விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில்30 சதவீதம் அதிகரித்துவிட்டதாக அமெரிக்கத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஜலந்தரில் நிருபர்களிடம் பேசிய அவர், விசா தொடர்பான பணிகளை மேற்கொள்ள விஎப்எஸ் என்ற இந்தியநிறுவனத்துடன் அமெரித்தத் தூதரகம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.டெல்லி, ஜலந்தர், சண்டீகரில் இந்த அமைப்பின் மூலமாக விசா வேண்டுவோர் தூதரகத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
மும்பை அமெரிக்கத் தூதரகம் விரிவாக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு மே முதல் ஹைதராபாத்திலும்அமெரிக்கத் தூதரகம் திறக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications