பிரசாரம் ஓய்ந்தது-வரலாறு காணாத பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் கடந்த இரு மாதமாக நடந்து வந்து அனல் பறக்கும் பிரசாரம் இன்றுமாலை 5 மணியுடன் முடிவடைந்தது.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான நடைமுறைகள் ஏப்ரல் 13ம் தேதி தொடங்கின.அன்றுதான் வேட்பு மனு தாக்கல் தொடங்கி 20ம் தேதி வரை நடந்தது. அதன் பின்னர்பிரசாரம் சூடு பிடித்தது.

அதிமுக, திமுக கூட்டணிகள் மற்றும் பாஜக, விஜயகாந்த், கார்த்திக் கட்சியினர் தீவிரப்பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

திமுக தரப்பில் பெரும் பட்டாளமே பிரசாரத்தில் ஈடுபட்டது. அதிமுக தரப்பில்ஜெயலலிதா, வைகோ, திருமாவளவன் ஆகிய மூன்று பேரும் முக்கிய பிரசாரபீரங்கிகளாகத் திகழ்ந்தனர்.

தேசியத் தலைவர்களும் தமிழகத்தில் தீவிரப் பிரசாரம் செய்தனர். பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அத்வானி, பண்டாரு தத்தாத்ரேயா,ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பல்வேறு தேசியத் தலைவர்களும் தீவிரப்பிரசாரம் மேற்கொண்டனர்.

இன்று மாலை 5 மணியுடன் தீவிர தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. அதன் பிறகுபிரசாரம் செய்யக் கூடாது. மீறிச் செய்தால் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து இன்று நிருபர்களிடம் பேசிய நரேஷ்குப்தா,

இன்று மாலை 5 மணி முதல் 8ம் தேதி மாலை 5 மணி வரை தேர்தல் கருத்துக்கணிப்புகள் எதையும் வெளியிடக் கூடாது. பத்திரிக்கை, டிவியில் தேர்தல் விளம்பரம்செய்யக் கூடாது.

ஜெயா டிவியில் ஒளிபரப்பப்படும் கைமாறு என்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு அனுமதிபெறப்படவில்லை. அதை நிறுத்த ஜெயா டிவிக்கு பேக்ஸ் அனுப்பப்பட்டுள்ளதுஎன்றார்.

வரலாறு காணாத பாதுகாப்பு

இதற்கிடையே தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வரும் 8ம் தேதி நடக்கவுள்ள வாக்குப் பதிவுக்காக சுமார் 1 லட்சம் மத்தியப் படையினரும் போலீசாரும் மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து நரேஷ் குப்தா கூறுகையில்,

196 கம்பெனி மத்திய பாராமிலிட்டப் படைகளும் ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 111கம்பெனிகளும், மக்களவைத் தேர்தலில் 125 கம்பெனி மத்தியப் படைகளும் தான் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

ஆனால், இம்முறை மிகப் பலத்த பாதுகாப்பைப் போட்டுள்ளோம். மத்திய எல்லை பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில்துறைபாதுகாப்புப் படை, அண்டை மாநிலங்களைச் சேர்ந்த ரிசர்வ் போலீஸ் படைகள் தமிழகம் வந்துள்ளன என்றார்.

தமிழகம் வந்துள்ள மத்தியப் படைகள் ஏற்கனவே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர். பதற்றமான பகுதிகளில் ஏற்கனவேபாதுகாப்புப் பணியில் ஈடுபடவும் ஆரம்பித்துவிட்டனர்.

இவர்களைத் தவிர ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற போலீசாரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 60 தொகுதிகள் பதற்றமானவை என்று அடையாளம் காணப்பட்டு அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 5,928 வாக்குப் பதிவு மையங்களில் 302 மையங்கள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.

இன்று முதல் வாக்குப் பதிவு முடியும் வரை இந்த இடங்களில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்துவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில்மட்டும் 13,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

இவர்களைத் தவிர கமாண்டோ படையினரையும் தயார் நிலையில் வைத்திருக்க உள்துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இன்று மாலையுடன் பிரசாரம் முடிவடைந்ததைத் தொடர்ந்து வீடு வீடாக சென்றுதுண்டுப் பிரசுரங்களைக் கொடுத்து வேட்பாளர்களும், அவர்களது கட்சியினரும் ஓட்டுவேட்டையாடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+