வைகோவுக்கு விரைவில் காங்கிரஸ் கல்தா?

Subscribe to Oneindia Tamil

சென்னை - தூத்துக்குடி:

மதிமுக நீடித்தால் நாங்கள் விலகி விடுவோம் என்று திமுக கூறியுள்ளதையடுத்துகூட்டணியில் இருந்து வைகோவுக்கு விரைவில் கல்தா கொடுக்கப்படும் என்றுதெரிகிறது.

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சோனியாவின் பேச்சில் இதுவெளிப்பட்டது.

தமிழகத்தில் ஏற்கனவே சென்னை, மதுரையில் நடந்த பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசிய சோனியா காந்தி வெள்ளிக்கிழமை தூத்துக்குடி மற்றும் கோவையில்அவர் பிரசாரம் செய்தார்.

முந்தைய கூட்டங்களில் வைகோவை விமர்சிக்காத சோனியா நேற்று மறைமுகமாகத்தாக்கினார்.

தூத்துக்குடியில் நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளாகஅதிமுக அரசின் கோரப் பிடியில் சிக்கியிருந்த தமிழகம விரைவில் விடுபடப்போகிறது.

2 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற ஆட்சியை மத்தியில்அமைக்க ஆதரவு கேட்டோம். தமிழக மக்கள் முழு ஆதரவை அளித்தார்கள்.இப்போது தமிழகத்திலும் நல்லாட்சி அமைய வாக்கு கேட்கிறோம்.

அதிமுகவின் சர்வாதிகாரப் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்க, தனி நபரின்ஆளுமையிலிருந்து தமிழகத்தை மீட்க ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்குவாக்களியுங்கள்.

தமிழகத்தில் உருவாகவிருக்கும் புதிய அரசு மத்திய அரசுடன் இணக்கமாகசெயல்படும் அரசாக இருந்தால் அதன் மூலம் தமிழகம் மேலும் பல வளர்ச்சிகளைகாண முடியும்.

தற்போதைய தமிழக அரசு மத்தியஅரசுடன் இணக்கமாக இல்லை. மோதல்போக்குடன் செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடிப் பகுதியில் சிறப்புப் பொருளாதாரமண்டலத்தை அமைக்க மத்திய அரசு முயற்சித்து.

ஆனால் அதை நிறைவேற்ற விடாமல் தமிழக அரசு தடுத்து விட்டது. சுனாமிபாதிப்பின்போது தமிழக அரசுக்கு போதிய நிதியை மத்திய அரசு அளித்தது. ஆனால்அதை அதிமுக அரசு என்ன செய்தது என்றே தெரியவில்லை.

நம்முடன் நெருங்கி இருந்தவர்கள் (வைகோ) இப்போது எதிர் அணிக்குச் சென்றதும்நம்மைத் தாக்கிப் பேசி வருகிறார்கள். இதற்குப் பெயர் தான் உண்மையானசந்தர்ப்பவாதம். அவர்களை மக்கள் அடையாளம் காண வேண்டும் என்றார் சோனியாகாந்தி.

பின்னர் கோவையில் நடந்த கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசிய சோனியா காந்திஅங்கிருந்து டெல்லி திரும்பினார்.

வைகோவை சந்தர்ப்பவாதி என்று முதல் கட்டமாக அட்டாக்கை ஆரம்பித்துள்ளதுகாங்கிரஸ். இதனால் தேர்தலுக்குப் பின் கூட்டணியில் இருந்து அவர் விரட்டிப்படுவார்என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+