சொன்னதை செய்வது நான் மட்டுமே: ஜெ
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கருணாநிதி வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டார். ஆனால், நான் நிறைவேற்றுவேன் என்று முதல்வர்ஜெயலலிதா கூறினார்.
சென்னை சூளைமேட்டில் அவர் செய்த இறுதிக் கட்ட பிரச்சாரத்தில்,கருணாநிதி எப்போதும் வாக்குறுதிகளை அளிப்பார். ஆனால் எதையுமே நிறைவேற்ற மாட்டார். ஆனால்,சொன்னதையெல்லாம் நிறைவேற்றுவது நான் மட்டும் தான்.
கடந்த தேர்தலில் சொன்னது போலவே வீராணம் திட்டத்தை நிறைவேற்றி சென்னை மக்களின் தாகத்தைநிரந்தரமாகத் தீர்த்தேன்.
கலர் டிவி உள்ளிட்ட அறிவிப்புக்களை வெளியிடுகிறார். பிரதமரை மேடையில் வைத்துக் கொண்டு, பிரதமரைநம்பித்தான் இந்த வாக்குறுதிகளை அளித்ததாக கருணாநிதி கூறினார். ஆனால், அதற்கு பிரதமர் எந்த பதிலும்அளிக்கவில்லை.
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் காண்ட்ராக்ட் அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியர்க் மற்றும்மருத்துவர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதிய விகிதம் அமலாக்கப்படும் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications