வைகோ நீடித்தால் நாங்கள் விலகுவோம்-திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில்மதிமுக நீடித்தால் நாங்கள் விலகி விடுவோம் என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.

திமுக கூட்டணியிலிருந்து விலகி அதிமுக கூட்டணியில் சேர்ந்த வைகோ, மத்தியஅரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற மாட்டோம், காங்கிரஸ்தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தொடருவோம் என்றுஅறிவித்தார்.

அதற்கு திமுக தலைவர் கருணாநதி எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக காங்கிரஸ்கட்சி விளக்கம் அளிக்கையில், பிகாரில் எதிரும்புதிருமாக செயல்படும் லாலுபிரசாத்தும், ராம் விலாஸ் பாஸ்வானும் காங்கிரஸ் கூட்டணியல் நீடிப்பதைப் போலதிமகவும், மதிமுகவும் நீடிக்கலாம் என்று விளக்கியது.

அத்தோடு பிரச்சினையை விட்டார் கருணாநதி. இந் நிலையில் ஐபிஎன்-லைவ்தொலைக்காட்சி ஒன்றுக்கு கருணாநிதி பேட்டியளித்தார்.

அப்போது அதிமுகவுடன் கூட்டு வைத்துள்ள வைகோ மத்திய காங்கிரஸ்கூட்டணியிலும் தொடர்கிறாரே என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த கருணாநிதி, கூட்டணியில் வைகோ தொடர்ந்தால் நாங்கள் விலகிவிடுவோம் என்று பதில் தந்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், மத்திய கூட்டணியில் தொடர்வாதக் கூறிக் கொண்டுமத்திய அரசையும் விமர்சிக்கிறார் வைகோ. இதனால் மதிமுக கூட்டணியிலிருந்துநீக்கப்பட வேண்டும் என்றார்.

முன்னதாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கருணாநிதி அளித்த பேட்டியில்,

பாஜக கூட்டணியிலிருந்து நாங்கள் விலகியது குறித்து இப்போது சில பத்திரிக்கைகள்சர்ச்சை எழுப்புகின்றன.

முரசொலி மாறன் மறைவுக்குப் பின்னர் திமுக தரப்பிலிருந்து யாரை கேபினட்அமைச்சராக நியமிக்கலாம் என்று அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் என்னிடம்தொலைபேசியில் கேட்டார்.

அதற்கு, தலித் இனத்தைச் சேர்ந்த இணை அமைச்சர் ராஜாவை கேபினட் அமைச்சராகபதவி உயர்த்தலாம் என்று யோசனை தெரிவித்தேன்.

ஆனால், இரு தினங்கள் கழித்து வெங்கையா நாயுடு என்னை வந்து சந்தித்தார். ராஜாமிகவும் ஜூனியர் அமைச்சர். எனவே அவரை கேபினட் அமைச்சராக்குவது சரியாகப்படவில்லை என்றார்.

இந்தப் பதில் எனக்கு பிடிக்கவில்லை. ராஜாவை விட ஜூனியர்கள் எல்லாம் கேபினட்அமைச்சர்களாக இருந்தார்கள். இதனால் வாஜ்பாய் என்னை புண்படுத்தி விட்டதாகஉணர்ந்தேன்.

இப்படிப்பட்ட காரணங்களால்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்துவிலகினோம். இதுவரை இந்தத் தகவலை யாரிடமும் சொன்னதில்லை.

ஆனால் இம்முறை காங்கிரஸ் உடனான கூட்டணியில் அம்மாதிரியான பிரச்சினைகள்எழவில்லை என்றார் கருணாநிதி.

காஞ்சி மடமும் பத்திரிக்கையாளரும்:

இதற்கிடையே துறைமுகம் தொகுதியில் மண்ணடி பகுதியில் பிரச்சாரம் செய்த கருணாநிதி,

திமுக மகத்தான வெற்றி பெறும் என உறுதியான தகவல்கள் வந்துள்ளன. இதை மறைக்கும் வகையில் அதிமுக பொய்களைப் பரப்பிட மனப்பால்குடிக்கிறது. அதெல்லாம் நடக்காது.

சங்கராச்சாரியாரைக் கைது செய்து காஞ்சி மடத்தில் சோதனை நடத்தியபோது அந்த வழக்கில் ஒரு பத்திரிக்கையாளர் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் போலீசிடம்சிக்கியதாகவும், அதனால் கலக்கம் அடைந்த அந்த பத்திரிக்கையாளர், ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும் திமுகவுக்கு எதிராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.

அது போன்ற ஆசாமிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான இடத்தில் திமுகவை நீங்கள் அமர்த்த வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+