என்னை கொல்ல சதி: வைகோ புலம்பல்

Subscribe to Oneindia Tamil

சிவகாசி:

மும்பையில் உள்ள கூலிப் படையை வைத்து என்னைக் கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தகவல்தெரிய வந்துள்ளது என வைகோ பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தின் பரபரப்பான அரசியல்வாதியாகிவிட்டார் வைகோ. மேடைக்கு மேடை எதாவது குண்டைப் போட்டுவருகிறார்.

அந்த வகையில் சிவகாசியில் பிரச்சாரக் கூட்டத்தில் வைகோ பேசியதாவது:

ஒரு மாநிலத்தின் மந்திரிகளை தீர்மானிக்கும் அதிகாரம் முதல்வருக்கு உண்டு. மத்தியில் அதைத் தீர்மானிக்கிறஅதிகாரம் பிரதமருக்குத் தான் உண்டு. ஆனால், யார் எந்த மந்திரியாக வேண்டும் என்று தீர்மானிக்கும்அதிகாரத்தை கருணாநிதிக்குக் கொடுத்தது யார்?

உங்களுக்கு வேண்டிய இலாக்காக்களை மிரட்டியும் பிளாக் மெயில் செய்தும் வாங்கினீர்கள். இன்று கூடஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் வைகோ இருந்தால் அந்தக் கூட்டணியில் திமுக இருக்காதுஎன்று மத்திய அரசை மிரட்டுகிறீர்கள்.

இந்தத் தேர்தலில் மக்கள் உங்களை தூக்கி எறியப் போவது உறுதி. ஜனார்தன ரெட்டியும் நீங்களும் எப்படி மந்திரிபதவிகளுக்கு ஒப்பந்தம் போட்டீர்கள்?. பிரதமரின் அதிகாரத்தை கோபாலபுரத்தில் உட்கார்ந்து கொண்டு முடிவுசெய்தீர்கள்.

பிரதமரின் அதிகாரத்தை நீங்கள் கையில் எடுத்துக் கொண்டீர்கள். ஜனநாயகத்தைப் பற்றி நீங்களா பேசுவது?.உங்கள் கட்சி எம்பிக்கள் 15 பேரும் ராஜினாமா செய்யட்டும். என் எம்பிக்களும் ராஜினாமா செய்வார்கள்.தைரியம் இருந்தால் களத்தில் சந்திப்போம். நீங்கள் தயாரா?

தமிழகத்தின் அதிகாரத்தைக் கைப்பற்ற கருணாநிதியின் குடும்பத்தினர் துடிக்கின்றனர். மதிமுக போட்டியிடும்தொகுதிகளில் கோடி கோடியாக கொட்டுகிறீர்கள். நீங்கள் எத்தனை கோடி கொட்டினாலும் மக்களிடம் உங்கள்ஜம்பம் பலிக்காது.

டாடாவை மிரட்டிய தயாநிதியை பிரதமர் பதவி நீக்க வேண்டும். அது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.

நான் கருணாநிதி குடும்பத்தின் பித்தலாட்ட வேலைகளை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறுவதால் என் மீதானஆத்திரத்தில் ஒரு கொடிய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நம்பகத்தன்மையான இடத்தில் இருந்து எனக்கு தகவல்கிடைத்துள்ளது.

அதாவது மும்பையில் உள்ள கூலிப் படையை வைத்து என்னைக் கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகதகவல் தெரிய வந்துள்ளது.

மரணத்தைக் கண்டு அஞ்சுபவன் அல்ல நான். பதவிக்காக பொது வாழ்வில் நான் இல்லை. மக்களுக்கு நல்லதுசெய்யவே அரசியலில் இருக்கிறேன். அப்படிப்பட்ட என்னை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளனர்.

உங்கள் குடும்பத்தைப் பற்றி சொல்வதனால் என் மீதான ஆத்திரம் எந்த அளவுக்கு எல்லை மீறிப் போய் உள்ளதுஎன்பதும் எனக்குத் தெரியும் என்றார் வைகோ.

ஜூவி மீது பாய்ச்சல்:

முன்னதாக சாத்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்த வைகோ,

புரட்சித் தலைவியின் அதிமுகவும் மதிமுகவும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள். ஜூனியர் விகடன்பத்திரிக்கையில் கருத்துக் கணிப்பு வெளியாகியிருக்கிறது. அது அவர்களே எழுதிய கணிப்பாகும்.அதையெல்லாம் மீறி அதிமுக வெல்லும்.

வளமான தமிழ்நாட்டை உருவாக்க, புரட்சித் தலைவி, புண்ணியவதியின் ஆட்சி மீண்டும் மலர அதிமுகவுக்குவாக்களியுங்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+