கருணாநிதியை பார்த்து பிரமித்தேன்- வி.பி.சிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக நலனுக்காக மட்டுமே கவலைப்படுபவர் கருணாநிதி என்று முன்னாள் பிரதமர்வி.பி.சிங் கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்டசிந்தாதிரிப்பேட்டையில் இன்று நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் முன்னாள்பிரதமர் வி.பி.சிங் கலந்து கொண்டு பேசினார்.

அவருடன் நடிகரும், ஜன் மோர்ச்சா கட்சியின் தலைவருமான ராஜ் பாப்பர், மத்தியஅமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

வி.பி.சிங் பேசுகையில், என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகச் சிறந்தநண்பர்களில் ஒருவர் கருணாநிதி. அதற்காக நான் பெருமை அடைகிறேன்.

சமூக நீதியின் பால் அவர் காட்டிய அக்கறையை நினைத்து நான் பிரமித்துப்போனேன். அதனால் அவர் பதவியை இழந்தாலும் கவலைப்படாதவர்.

பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட நலிவடைந்த சமுதாயத்தினர் மீது பெரும்அக்கறை காட்டுபவர் கருணாநிதி.

மற்றவர்கள் போல நினைத்த பாதையில் செல்பவர் அல்ல கருணாநிதி. ஒரேபாதையில்தான் அவர் எப்போதும் நடைபோடுவார். அந்தப் பாதை, தமிழகத்தின்வளர்ச்சிக்காக, நலனுக்காக, உயர்வுக்காக மட்டுமே இருக்கும்.

வரும் தேர்தலில் கருணாநிதி தலைமையிலான ஜனநிாயக முற்போக்குக் கூட்டணிமிகப் பெரும் வெற்றியைப் பெறுவது நிச்சயம். அடுத்த முதல்வராக கருணாநதிமீண்டும் பதவியில் அமருவதும் நிச்சயம் என்றார் வி.பி.சிங்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+