சேலம் கலெக்டரின் அரசியல்: தூக்கியது தேர்தல் ஆணையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுகவினருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த சேலம் மாவட்ட கலெக்டரை தேர்தல்ஆணையம் அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளது.

அவருக்கு புதிய பொறுப்பு ஏதும் கொடுக்கப்படவில்லை. காத்திருப்போர் பட்டியலில்வைக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தவர் சுகுமாறன். இவர் ஆளுங்கட்சிக்குஆதரவாக செயல்பட்டு வருவதாக நிறைய புகார்கள் வந்தன.

சேலம் மாவட்ட அதிமுக செயலாளருக்கு இணையாக கட்சிப் பணியில் தீவிரம்காட்டினார் சுகு.

மேலும் தேர்தல் நடைமுறைகள் தொடங்கியதிலிருந்து, தேர்தல் நடத்தைவிதிமுறைகளை சரியாக பின்பற்றாமலும், விதிமுறைகளை பின்பற்ற மறுத்தும்,தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை கண்டுகொள்ளாமலும் செயல்பட்டு வந்தார்.

விதிகளை மீறி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பெருமளவில் நிதியுதவிவழங்கியதோடு அதிமுகவுக்காக ரொம்பவே உழைத்தார்.

இதையடுத்து தேர்தல் ஆணையம், சுகுமாறனை உடனடியாக இடமாற்றம் செய்யதமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி சுகு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் அவருக்குப் புதிய பொறுப்பு ஏதும் கொடுக்கப்படவில்லை, காத்திருப்போர்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரசு ஊழியர்களை தபால் ஓட்டு போட விடாமல் தடுக்கும் வேலைகளில் மாவட்டநிர்வாகம் இறங்கியதாக ஊழியர்கள் புகார் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அரசுஊழியர் ஓட்டு திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் அவர்களது தபால் ஓட்டுமுறையில் குளறுபடி நடந்தது. இதற்கும் சுகுவே காரணம் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+