குடும்பத்துடன் வந்து வாக்களித்த ரஜினி
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி, மகள்களுடன் வந்து ஓட்டுப் போட்டார்.
சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வசித்து வரும் ரஜினிகாந்த் ஆயிரம் விளக்குதொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளவாக்குச் சாவடிக்கு இன்று பிற்பகலில் தனது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா,செளந்தர்யா ஆகியோருடன் வந்து ஓட்டுப் போட்டார்.
ஓட்டுப் போட்டு விட்டு வெளியே வந்த ரஜினியை செய்தியாளர்கள் சூழ்ந்தபோது,தமிழக மக்களைப் போலவே, நானும் இந்தத் தேர்தல் முடிவை அறிந்து கொள்ளமிகவும் ஆவலாக உள்ளேன் என்று மட்டும் கூறி விட்டு அங்கிருந்து சென்றார்.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது, இரட்டை இலைக்கு வாக்களித்ததாகவெளிப்படையாகக் கூறினார் ரஜினி என்பது நினைவுகூறக்கத்தது.
இந்தமுறை யாருக்கு ஓட்டு போட்டார் என்பதை தெரிவிக்கவில்லை.
வாக்களித்த சூர்யா, ஸ்னேகா
அதே போல தேர்தலில் பல முன்னணி நடிகை, நடிகர்களும் வாக்களித்தனர்.
கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் அதிமுகவை சேர்ந்த நடிகர்கள்எஸ்.எஸ்.சந்திரன், செந்தில், நடிகைகள் கோவை சரளா, விந்தியா, ஆர்.சுந்தர்ராஜன்,நடிகை ப்ரீத்தா ஆகியோர் வாக்களித்தனர். அதே வாக்குச் சாவடியில் நடிகர்ஸ்ரீகாந்த்தும் வாக்களித்தார்.
தேனாம்பேட்டையில் நடிகை ஸ்னேகா வாக்களித்தார். ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வாக்குச் சாவடியில்கற்பு புகழ் குஷ்பு வாக்களித்தார்.
![]() |
நடிகர் விஜய், அவரது மனைவி சங்கீதா, தந்தை சந்திரசேகரன், தாயார் ஷோபா, அஜீத்,அவரது மனைவி ஷாலினி, விஜயக்குமார், பிரபு, முரளி உள்ளிட்ட நடிகர், நடிகையர்தொடர்ந்து வாக்களித்தனர்.
![]() |
மைலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் நடிகர் நெப்போலியன் தனது மனைவியுடன்சென்று வாக்களித்தார்.
![]() |
நடிகர் சூர்யா தி.நக்கர் இந்தி பிரச்சார சபாவில் வந்து வாக்களித்தார். அவருடன் தந்தைசிவக்குமார், தாயார் லட்சுமி, தம்பி கார்த்தி, தங்கை பிருந்தா ஆகியோரும்வாக்களித்தனர்.
![]() |
நடிகை மீனா சின்னமலையில் உள்ள பள்ளியில் வாக்களித்தார்.
















Click it and Unblock the Notifications