திமுக- அதிமுக, அதிமுக-காங். மோதல்

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்:

திருவள்ளூரில் அதிமுக பூத் ஏஜென்டுகளுக்கும் காங்கிரஸ் ஏஜென்டுகளுக்கும் இடையே பயங்கர மோதல்நடந்தது. இதனால் அங்கு வாக்குப் பதிவு சுமார் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது.

பள்ளிப்பட்டு தொகுதிக்குக் கீழ் வரும் பெரியராமபுரத்தில் உள்ள வாக்குச் சாவடிக்குள் இந்தச் சம்பவம் நடந்தது.அதிமுகவினருக்கும் காங்கிரசாருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அடிதடியாக மாறியது.

இரு தரப்பினரும் அங்கிருந்த சேர்களைத் தூக்கி ஒருவர் மீது ஒருவர் வீசி தாக்கிக் கொண்டனர். இதையடுத்துவாக்களிக்க வந்த பொது மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

தகவல் அறிந்த திருத்தணி டிஎஸ்பி வீரபாண்டியன் சம்பவ இடத்துக்கு வந்து இரு தரப்பினரையும்அமைதிப்படுத்தினார். அதைத் தொடர்ந்தே வாக்குப் பதிவு நடந்தது.

செங்கல் வீச்சு- மண்டை உடைப்பு

அதே போல சென்னை ஜாம்பஜாரில் திமுகவினருக்கும் சுயேச்சசை ஒருவரின் ஏஜென்டுகளுக்கும் இடையேவாக்குச் சாவடிக்கு வெளியே மோதல் மூண்டது.

அங்கிருந்த செங்கலை எடுத்து திமுகவினர் வீசியதில் சுயேச்சையின் ஏஜென்டான தன்ராஜ் என்பவருக்கு மண்டைஉடைந்தது.

அமைச்சரை தாக்க முயற்சி:

சேலத்தில் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமியின் காரை திமுகவினர்முற்றுகையிட்டனர்.

வீரபாண்டி அருகே தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்ற விஜயலட்சுமியை 200 பேர்கொண்ட திமுகவினர் முற்றுகையிட்டனர்.

இதையடுத்து திமுகவினருக்கும் அமைச்சருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இரு தரப்பும் அடித்துக் கொள்ளும் சூழல் உருவானதையடுத்து போலீசார் விரைந்துவந்து இரு தரப்பினரையும் கலைந்து போக வைத்தனர்.

இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய விஜயலட்சுமி பழனிசாமி, திமுகவினர் தன்னைகெல்ல திமுகவினர் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக புகார் தெரிவித்தார்.

அதிமுக மீது இ.கம்யூ தாக்குதல்:

இதற்கிடையே உடுமலைத் தொகுதியில் அதிமுக தொண்டரை இந்திய கம்யூனிஸ்ட்கட்சியினர் தாக்கினர்.

நாட்ராயன் என்பவர் சமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகிஅதிமுகவில் இணைந்தார்.

இந் நிலையில் இன்று ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்த நாட்ராயணை இந்தியகம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் சுற்றி வளைத்துத் தாக்கினர். இதில் படுகாயமடைந்தநாட்ராயன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+