அமைதியான வாக்குப் பதிவு: டிஜிபி அலெக்ஸ்
சென்னை:
தமிழகம் முழுவதும் வாக்குப் பதிவு மிகவும் அமைதியாக நடந்ததாக மாநில டிஜிபிஅலெக்ஸாண்டர் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,தமிழகம் முழுவதும் வாக்குப் பதிவு மிக மிக அமைதியாக நடந்தது. எந்தவிதஅசம்பாவிதமும் நடந்ததாக இதுவரை தகவல் இல்லை. அனைத்துத் தொகுதிகளிலும்அமைதி நிலவுகிறது என்றார் அலெக்சாண்டர்.
இதேபோல சென்னை நகரில் உள்ள 14 தொகுதிகளிலும் அமைதியான முறையில்வாக்குப் பதிவு நடந்ததாக மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் தெரிவித்தார்.
படகுகளில் வந்து ஓட்டு:
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 15 மலை கிராமங்களைச் சேர்ந்த வாக்காளர்கள்படகுகளில் வந்து ஓட்டுப் போட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் சட்டசபைத் தொகுதிக்குட்பட்டு ஏராளமானமலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் பல கிலோமீட்டர் தூரம் நடந்து வந்துபின்னர் பேச்சிப்பாறை அணையைக் கடந்து வந்து வாக்களிக்க வேண்டும்.
இவர்களின் வசதிக்காக பேச்சிப்பாறை அணைப் பகுதியைக் கடக்க படகுகள் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தன. 15 மலை கிராமங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் இந்த படகுசவாரியைப் பயன்படுத்து ஆர்வத்துடன் ஓட்டுப் போட்டுச் சென்றனர்.
திருவட்டார், விளவங்கோடு, பத்மநாபபுரம் ஆகிய தொகுதிகளில் கணிசமானஅளவில் மலையாள மொழி பேசுவோரும் இருப்பதால், மின்னணு வாக்குப் பதிவுஇயந்திரங்களில் தமிழ் தவிர மலையாளத்திலும் வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.












Click it and Unblock the Notifications