ஆண்டிப்பட்டி: சீமான்-அதிமுகவினர் ரெளடித்தனம்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர் சீமான்அதிமுகவினரால் தாக்கப்பட்டார்.
ராஜேந்திரா நகரில் உள்ள ஒரு வாக்குச் சாவடிக்கு வந்தார் சீமான். அப்போது அங்கு பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு ஓட்டுபோட உதவிய அதிமுகவினர், அந்த ஓட்டை இரட்டை இலையில் போட வைத்தனர்.இது குறித்து சீமான் கேள்வி எழுப்பியபோது அங்கிருந்த அதிமுக ஏஜென்டுகளுக்கும் சீமானுக்கும் இடையே வாக்குவாதம்ஏற்பட்டது.
இதையடுத்து திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வாக்குச் சாவடிஅதிகாரியிடம் சீமான் புகார் செய்ததோடு, மின்னணு இயந்திரத்தின் மின்சார இணைப்பையும் துண்டித்துவிட்டு அதை கீழேஇழுத்துப் போட்டுவிட்டுச் சென்றார்.
இதையடுத்து சீமானின் காரை அதிமுகவினர் தாக்கி உடைத்துள்ளனர். மேலும் சீமானையும் சுற்றி வளைத்துத் தாக்கினர்.
இதைத் தொடர்ந்து ஓடி வந்த திமுக தொண்டர்கள் சீமானை பத்திரமாக இன்னொரு காரில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டுஅதிமுகவினருடன் கை கலப்பில் ஈடுபட்டனர்.
இச் சம்பவத்தால் வாக்குப் பதிவு 10 நிமிடம் பாதிக்கப்பட்டது. வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு மீண்டும் மின் இணைப்புதரப்பட்டு வாக்குப் பதிவு தொடர்ந்து நடந்தது.
சீமான் மீது புகார்:
இந் நிலையில் மின்னணு எந்திரத்தை சேதப்படுத்தியதாக சீமான் மீது வாக்குச் சாவடி அதிகாரி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அதே போல தன்னை வாக்குச் சாவடியிலேயே வைத்து அதிமுகவினர் தாக்கியதாக சீமானும் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இதற்கிடையே நிருபர்களிடம் பேசிய சீமான், அதிமுகவினர் ஏகப்பட்ட கள்ள ஓட்டுக்களைப் போட்டு வருகின்றனர். முறைகேடுகளிலும் ஈடுபட்டுள்ளனர்.அதனால் தான் நான் அந்த வாக்குச் சாவடிக்குள் போனேன். ஆனால், என்னை 8 பேர் கொண்ட அதிமுக கும்பல் ஆயுதங்களால் தாக்கியது என்றார்.
சீமானுக்கு மும்பை போலீஸ் பாதுகாப்பு:
முன்னதாக சீமானுக்கு ஆளும் கட்சியினரின் மிரட்டல்கள் வந்ததால், தமிழகபோலீஸை நம்பாமல் வெளி மாநில போலீஸ் பாதுகாப்பை வழங்கியது தேர்தல்ஆணையம்.
அதிமுகவினருக்கு கடும் மிரட்டலைத் தரும் வகையில் சீமானின் பிரசாரம் படுவிறுவிறுப்பாக இருந்தது. கூடவே அழகிரியும் களமிறங்கியதால் ஆண்டிப்பட்டியில்யார் ஜெயிப்பார்கள் என்று கேட்கும் அளவுக்கு போட்டி கடுமையாக உள்ளது.
அதிமுகவினருக்கு சற்றும் சளைக்காமல் பணத்தை அள்ளி இறைத்தார் இந்தச்செல்வச் சீமான்.
இந் நிலையில் தொகுதியில் தனக்கு மிரட்டல் இருப்பதால் வெளி மாநிலப் போலீஸ்பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தேர்தல் பார்வையாளர் ரந்தவவாவிடம்கோரிக்கை விடுத்தார் சீமான்.
அவரது புகாரை பரிசீலித்த தேர்தல் ஆணையம் அந்தக் கோரிக்கையில் நியாயம்இருப்பதாகக் (தமிழக போலீஸை நம்ப முடியாத நிலை உள்ளதால்) கருதி மகாராஷ்டிரமாநில போலீஸாரை சீமானின் பாதுகாப்புக்கு நியமித்துள்ளது.












Click it and Unblock the Notifications