5 மணிக்கு மேல் வாக்கு பதிவில்லை-நரேஷ்குப்தா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எக்காரணத்தைக் கொண்டும் வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு மேல் நீட்டிக்கப்படமாட்டாது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறியுள்ளார் .

வாக்குப் பதிவு குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நரேஷ்குப்தா,

மாநிலம் முழுவதும் வாக்குப் பதிவு அமைதியாக நடந்து வருகிறது.

பிற்பகலில் கள்ள ஓட்டுக்கள் போடப்படுவதைத் தடுக்க தீவிரக் கண்காணிப்புக்குஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சில இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் பிரச்சினை ஏற்பட்டு உடனடியாகஅவை சரி செய்யப்பட்டு வாக்குப் பதிவு நடந்து வருகிறது. ஏதாவது வாக்குசாவடியில் அதிக அளவில் வாக்குப் பதிவு நடந்திருந்தால், அங்கு மறு வாக்குப் பதிவுநடைபெறும்.

வாக்குப் பதிவை எக்காரணம் கொண்டும் 5 மணிக்கு மேல் நீட்டிக்க மாட்டோம்.அணைக்கட்டு உள்ளிட்ட சில தொகுதிகளில், உள்ளூர் பிரச்சினைகளைக் காரணம்காட்டி மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

ஆண்டிப்பட்டியில் வேட்பாளர் (திமுகவின் சீமான்) ஒருவர் தாக்கப்பட்டதாக தேர்தல்ஆணையத்திற்குப் புகார் வந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதுஎன்றார் நரேஷ் குப்தா.

மாநிலத்தின் பல இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பழுதுஏற்பட்டு வாக்குப் பதிவு பாதிக்கப்பட்டதால் வாக்குப் பதிவு நேரத்தை நீட்டிக்கவேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+