அதிமுகவினர் ஜனநாயகவாதிகள்: ஜெயா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபைத் தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களிக்கவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Jayalalitha&sasikala

தேர்தலையொட்டி அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

வாக்களிப்பதை ஜனநாயகக் கடமை என்று உணர்ந்து வாக்காளர்கள் அனைவரும்வாக்களிக்க வேண்டும். அறிவார்ந்த மக்கள் வாழும் தமிழகத்தில் 100 சதவீதவாக்குகள் பதிவாகின என்று பிற மாநிலங்கள் வியப்போடு பாராட்டும் வகையில்,முழு வாக்களிப்பு நடைபெற வேண்டும்.

அமைதிப் பூங்காவான தமிழகத்தில் வாக்காளர்கள் எந்தவிதத் தயக்கமும் இன்றி,வாக்குச் சாவடிக்குச் செல்லலாம். சுதந்திரமாக தங்களது வாக்குகளைப் பதிவுசெய்யலாம் என்ற நிலை நிலவுகிறது.

தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற உறுதியோடு ஜனநாயக வழியில் அதிமுகவினர்செயல்பட்டு வருகிறோம்.

அதே நேரத்தில், தங்களுக்கு ஏற்பட்ட தோல்வி பயத்தின் காரணமாக, விரக்தியின்விளிம்பில் நின்று கொண்டிருக்கும் திமுகவினர், வன்முறையைத் தூண்டி விடவும்தயாராகி உள்ளனர் என்பது அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அண்மையில்பேசியுள்ள பேச்சில் இருந்து தெரிய வருகிறது.

ஆனால் இத்தகைய மிரட்டல்களுக்கு அஞ்சாமல் மக்களை வாக்குச் சாவடிக்குச் சென்றுவாக்களிக்கச் செய்வது அதிமுகவினரின் முக்கியக் கடமை என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.

ஜெ ஆட்சி தொடர வேண்டும்: சரத்

இதற்கிடையே திமுகவில் இருந்து அதிமுகவுக்குத் தாவிய நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ளஅறிக்கையில்,

தனக்காக வாழாமல் தமிழக மக்களுக்காக வாழ்பவர் புரட்சித் தலைவி. கடந்த ஐந்துஆண்டுகளில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து மக்கள் எவ்வித பயம் இன்றிவாழ பல்வேறு நலத் திட்டங்களை வாரிக் கொடுத்த அம்மாவின் நல்லாட்சி தொடரவேண்டும் என்ற மக்களின் நிலைப்பாட்டினை மாற்றிட முயற்சிக்கும் கருணாநிதி,ஏமாற்றுத்தனமான வாக்குறுதிகளை வாரி வழங்கியுள்ளார்.

நாட்டு மக்களுக்காக மட்டுமே வாழும் ஜெயலலிதா சொன்ன வாக்குறுதிகளை நிச்சயம்நறைவேற்றுவார். தமிழக மக்கள் பாதுகாப்புடன் வாழ நடவடிக்கை எடுப்பார்.

Sarath&Rathika

தமிழகத்தில் நல்லாட்சி தொடர்ந்திட, ஏழைகள் வாழ்வு மலர்ந்திட, ஏழை மக்கள்பாதுகாப்புடன் வாழ்ந்திட மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும். இதையேமக்களும் விரும்புகிறார்கள் என்று கூறியுள்ளார் சரத்குமார்.

கடைசி வரை வராத ராதிகா:

சரத்குமாரின் நிர்பந்தந்தால் வேண்டா வெறுப்பாகவே அதிமுகவில் சேர்ந்துள்ளதாகக்கூறப்படும் ராதிகா கடைசி வரை அதிமுகவுக்காக பிரச்சாரத்தில் ஈடுபடாததுகுறிப்பிடத்தக்கது.

அவர் பிரச்சாரத்துக்கு வருவார் என்று சொல்லிக் கொண்டே இருந்தார் சரத். ஆனால்,கடைசி வரை வரவில்லை.

இந் நிலையில் சரத்குமாரும் அவரது மனைவி ராதிகாவும் இன்று கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார்பள்ளியில் வாக்களித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+