கார்த்திக் சிதம்பரம் மீது அதிமுகவினர் தாக்குதல்
காரைக்குடி:
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் சென்ற காரைத் தடுத்துநிறுத்திய அதிமுகவினர் கார்த்திக்கைத் தாக்கினார். இதையடுத்து அவர் தனது காருடன்அங்கிருந்து தப்பி அருகில் இருந்த சாக்கோட்டை காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துஉயிர் தப்பினார்.
திருமயம் தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் கொடுப்பதாகப.சிதம்பரம் புகார் கூறிய நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.காரைக்குடி தொகுதிக்குட்பட்ட சாக்கோட்டை என்ற இடத்தில் கார்த்திக் சிதம்பரம்தனது ஆதரவாளர்களுடன் கார்களில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குஅதிமுக வேட்பாளர் முத்தையா தலைமையிலான அதிமுகவினர் கார்த்திக்சிதம்பரத்தின் காரை தடுத்து நிறுத்தினர்.
முத்தையாவின் ஆட்கள் கார்த்திக்கைத் தாக்கினர். அவர்களிடம் பயங்கரஆயுதங்களும் இருந்தன.
இதைத் தொடர்ந்து கார்த்திக்கின் கார் டிரைவர் மிகவும் சமயோஜிதமாக அங்கிருந்துகாரை வேகமாக ஓட்டிச் சென்றார். மற்ற கார்களும் அவ்வாறே தப்பி வந்தன.
அனைத்துக் கார்களையும் நேராக சாக்கோட்டை காவல் நிலையத்திற்கு விடக் கூறினார்கார்த்திக் சிதம்பரம்.
கார்த்திக் உள்ளிட்ட காங்கிரஸார் சாக்கோட்டை காவல் நிலையத்திற்குள் புகுந்து உயிர்தப்பினர்.
அங்கு கார்த்திக் சிதம்பரத்தின் கார் டிரைவர் புகார் ஒன்றை அளித்தார்.
இந்தச் சம்பவத்தில் காரின் கண்ணாடி உடைந்தது. கார்த்திக்குக்கு பெரிய அளவில்காயம் ஏதும் இல்லை.
இது குறித்து அதிமுக தரப்பில் கூறுகையில், கார்த்திக் சிதம்பரம் தனதுஆதரவாளர்களுடன் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதற்காக வந்துகொண்டிருந்தார். இதை அறிந்து நாங்கள் காரை மறித்தோம்.
காரிலிருந்த 3 பெட்டிகள் நிறைய இருந்த பணத்தையும் பறிமுதல் செய்தோம். பின்னர்காருடன் கார்த்திக்கையும் மற்றவர்களையும் போலீஸாரிடம் ஒப்படைத்தோம் என்றுஒரே போடாகப் போட்டனர்.
ப.சிதம்பரம் கண்டனம்:
கார்த்திக் சிதம்பரம் மீது அதிமுகவினர் நடத்திய அராஜக வன்முறையை கடுமையாககண்டிப்பதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
திருமயம் தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் கொடுப்பதாக நான்புகார் கூறியுள்ளதால் அவர்கள் ஆத்திரமடைந்து இத்தகைய கோழைத்தனமானகாரியத்தில் இறங்கியுள்ளனர்.
அமைதியான முறையில் சென்று கொண்டிருந்த கார்த்திக்கையும், காங்கிரஸ்தொண்டர்களையும் தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளனர். ஆனால் புத்திசாலித்தனமாகஅனைவரும் காவல் நிலையத்திற்குச் சென்று விட்டதால் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
இந்தத் தாக்குதலை நினைக்கும்போது 1991ம் ஆண்டு திருச்சியில் எனது காரைவழிமறித்து அதிமுகவினர் நடத்திய தாக்குதல்தான் நினைவுக்கு வருகிறது என்றுகூறியுள்ளார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications