தேர்தல் அதிகாரி நெஞ்சு வலியால் சாவு
ஊத்தங்கரை:
தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரையில் வாக்குச் சாவடியில் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் திடீரென நெஞ்சுவலியால் உயிரிழந்தார்.
தர்மபுரி மாவட்ட மகளிர் மேம்பாட்டு உதவி திட்ட அலுவலராக இருந்த பிரகாஷ் (52) பர்கூர் தொகுதியில் ஒருவாக்குச் சாவடியின் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.இதையடுத்து நேற்று மாலையே பொறுப்பை ஏற்றுக் கொண்டு வாக்குச் சாவடியில் தேர்தல் முன்னேற்பாடுகளில்ஈடுபட்டிருந்தார். இந் நிலையில் இரவு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அங்கேயே அவர் இறந்தார்.
இதையடுத்து மாற்று அதிகாரி நியமிக்கப்பட்டு தேர்தல் நடந்தது.
மறந்து போன அதிகாரிகள்:
இதற்கிடையே சாத்தூர் தொகுதியில் சூரங்குடி கிராமத்தில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிக்கு இரவு வரைஅலுவலர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை.
இந்த வாக்குச் சாவடியை மறந்துவிட்டார்களாம். இதையடுத்து இன்று காலை விஏஓ மூலமாக அவசரமாக தகவல்போய் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் நடந்தது.
திணறிய ஊழியர்கள்:
இந் நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாக்குச் சாவடிகளில் ஈடுபட்ட ஊழியர்கள் போதிய பயிற்சிஇல்லாத காரணத்தால் தேர்தல் பணிகளில் தடுமாறிக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.
கலாட்டா?- புகார் செய்ய நம்பர்கள்
முன்னதாக வாக்குப் பதிவின்போது வன்முறைச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்துறை ஆணையர்லத்திகா சரண் கடும் எச்சரிக்கை விடுதார்.
தேர்தல் வன்முறை நடந்தால் உடனே சென்னையில் உள்ள போலீஸ் தனிப் பிரிவு தொலைபேசி எண்களான 28584422, 28584433, 23452325,28555036 ஆகியவற்றிலும், 100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம்.
தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி வரலாறு காணாத வகையில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 196 கம்பெனிமத்திய துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து லத்திகா சரண் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தேர்தல் விதிமுறைகளை மீறி யாரும் நடக்கக் கூடாது. நடத்தை விதிகளை மீறியதாக 20 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திமுக மீது 10 புகார்கள், அதிமுக5, மதிமுக 2, விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், சுயேச்சை ஆகியோர் மீது தலா 1 புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலின்போது வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நடத்தை விதிமுறைகளை மீறும் வாகனங்கள் உடனடியாக பறிமுதல்செய்யப்படும்.
கள்ள ஓட்டுப் போடுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.
பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தலைமறைவான 1,696 பேரை தேடிப் பிடித்து கைது செய்துவிட்டோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் 1,070பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாக்காளர்கள் எந்தவித அச்சமும் இன்றி வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் வன்முறைகள் தொடர்பாக பொதுமக்கள் வசதிக்காக மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.எங்காவது வன்முறை நடந்தால் இந்தப் பிரிவைத் தொடர்பு கொண்டு புகார் கொடுக்கலாம்.
தனிப் பிரிவு தொலைபேசி எண்கள்: 28584422, 28584433, 23452325, 28555036. இதுதவிர 100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டுபுகார்களைத் தெரிவிக்கலாம் என்று லத்திகா சரண் தெரிவித்தார்.
ஏற்கனவே வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
வாக்காளர் மீது புகார் கூறலாம்:
இதற்கிடையே வேட்பாளர்களின் பூத் ஏஜென்டுகளுக்கு, வாக்காளர் மீது சந்தேகம்ஏற்பட்டால் அவர்கள் மீது புகார் கூற 2 ரூபாய் கட்டணம் செலுத்தி புகார்கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுப் போட வருவோர், புகைப்பட அடையாள அட்டையை எடுத்து வர வேண்டும்என்று உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைஇல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 13 ஆவணங்களில் ஒன்றைகண்டிப்பாக எடுத்து வர வேண்டும்.
13 ஆவணங்களில் ஒன்றைக் காட்டும் வாக்காளர் மீது பூத் ஏஜென்டுகளுக்கு சந்தேகம்ஏற்பட்டால் அதுகுறித்து வாக்குச் சாவடி தலைமை அதிகாரியிடம் புகார் கூறலாம்.புகார் கொடுப்பதற்கு ரூ. 2 கட்டணமாக செலுத்த வேண்டும்.
அந்தப் புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட வாக்காளரை தலைமை தேர்தல் அதிகாரிஅழைத்து விசாரிப்பார். அந்த நபர் கள்ள ஓட்டுப் போட வந்தவர் என்று தெரிந்தால்போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவார். பூத் ஏஜென்டு கொடுத்த 2 ரூபாய் அவரிடம்திருப்பிக் கொடுக்கப்படும்.
மாறாக, சம்பந்தப்பட்ட வாக்காளரிடம் தவறில்லை என்பது தெரிய வந்தால் அவர்ஓட்டுப் போட அனுமதிக்கப்படுவார். பூத் ஏஜென்டு செலுத்திய 2 ரூபாய் அரசிடம்போய்ச் சேர்ந்து விடும்.
சேலம் கலெக்டராக தீரஜ்குமார்:
இந் நிலையில் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவராக தீரஜ்குமார்நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகள் எதையும் முறையாக பின்பற்றாமல்,அதிமுகவினருக்கு ஆதரவாக நடந்து கொண்ட சேலம் மாவட்ட ஆட்சித் தலைவராகஇருந்த சுகுமாறன் தேர்தல் ஆணையத்தால் மாற்றப்பட்டார்.
அவருக்குப் பதில் புதிய ஆட்சித் தலைவராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாடு மாக்னஸைட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தவர் தீரஜ்குமார்.












Click it and Unblock the Notifications