விஜய்காந்தை விரட்டியடித்த வன்னியர் கிராமம்

Subscribe to Oneindia Tamil

விருத்தாசலம்:

விருத்தாசலத்தில் வன்னியர் கிராமத்துக்குள் நுழைந்த விஜய்காந்தை பாமகவினரும் பொது மக்களும் சேர்ந்துவிரட்டியடித்தனர்.

அடி விழும் சூழல் உருவானதால் அந்த ஊருக்குள் நுழையாமல் விஜய்காந்த் திரும்பிவிட்டார்.

மெளன புரட்சி:

முன்னதாக தனது மனைவி பிரேமலதாவுடன் சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள காவேரி பள்ளியில்வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

Vijaykanth&his wife Premalatha

எங்களது கட்சி புதியது. ஆனாலும் மக்கள் எங்களுக்கு அமோக ஆதரவளித்தார்கள். இரு கட்சிகளும் மாறி மாறிஆட்சி செய்தும் எந்த வளர்ச்சியும் அடையாததால் மாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள்.

மக்கள் இப்போது ஒரு மெளனப் புரட்சி நடத்தி வருகிறார்கள். இந்தத் தேர்தல் தமிழக அரசியலில் நல்லமாற்றத்தை ஏற்படுத்தும். விருத்தாசலத்தில் நான் மிகப் பெரிய வெற்றி அடைவேன் என்றார்.

உடனிருந்த பிரேமலதா கூறுகையில்,

எங்கள் கட்சிக்கு அமோகமான ஆதரவு உள்ளது. தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படப் போகிறது.விருத்தாசலத்தில் எனது கணவர் தமிழ்நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றார்.

பின்னர் விஜய்காந்த் தான் போட்டியிடும் விருத்தாசலத்தக்குச் சென்றார். அங்கு முத்தனை என்ற கிராமத்தில்வாக்குப் பதிவு நடப்பதை பார்வையிட அவர் சென்றார்.

விரட்டப்பட்ட விஜய்காந்த்:

ஆனால், அவரது காரை அந்த கிராமத்தினரும் பாமகவினரும் தடுத்து நிறுத்தினர். திரும்பிச் சென்றுவிடுமாறுகோஷம் எழுப்பினர். சிலர் அவரைத் தாக்கவும் முயன்றனர். நிலைமை மோசமாக இருப்பதை உணர்ந்தவிஜய்காந்த் உடனே அங்கிருந்து திரும்பிவிட்டார்.

விஜய்காந்துடன் வந்த கார்களுடன் அவசரமாகத் திரும்பிச் சென்றுவிட்டன.

ப.சிதம்பரம்:

காரைக்குடியில் கண்டனூரில் உள்ள வாக்குச் சாவடியில் ஓட்டு போட்ட பின் நிருபர்களிடம் பேசிய மத்தியநிதியமைச்சர் ப.சிதம்பரம்,

P.Chithambaram

திமுக கூட்டணிக்கான மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. இதனால் இந்தக் கூட்டணிநிச்சயம் வெற்றி பெறும் என்றார்.

ராமதாஸ்-அன்புமணி:

பாமக நிறுவனர் ராமதாசும் அவரது மகன் மத்திய அமைச்சர் அன்புமணியும் திண்டிவனத்தில் வாக்களித்தனர்.பின்னர் ராமதாஸ் நிருபர்களிடம் பேசுகையில், தமிழக மக்கள் எதிர்பார்க்கும் தீர்ப்பை அளிக்கப் போகிறார்கள்.தமிழகம் காப்பாற்றப்படும் என்றார்.

Ramdoss with his son

அதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வரதராஜன் திண்டுக்கல்லிலும் தமிழ் மாநில முஸ்லீம்லீக் தலைவர் ஜவஹிருல்லா துறைமுகம் தொகுதியிலும் வாக்களித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+