200 இடங்களில் வெல்வோம்-கருணாநிதி
சென்னை:
திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது என கருணாநிதி கூறினார்.
கோபாலபுரத்தில் மனைவி தயாளு அம்மாள், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், முரசொலி செல்வம், பேத்திஎழிலரசி உள்ளிட்டோருடன் வந்து ஓட்டு போட்டார் கருணாநிதி.
![]() |
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. 200 தொகுதிகளுக்குக் குறையாமல்கிடைக்கும். இதுவரை உள்ள நிலவரத்தின்படி திமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்று நம்புகிறேன். இந்தத்தேர்தல் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
முறைகேடுகள் மூலம் வெல்ல திமுக முயல்வதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு,தோல்வி பயம் வந்துவிட்டதால் அவரும் அதிமுகவும் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து போய்விட்டனர். இதுபத்திரிக்கைகள் எழுதுவது போல மிகக் கடினமான தேர்தல் எல்லாம் இல்லை. 1971ல் சந்தித்த தேர்தலை விட இதுஒன்றும் கஷ்டமான தேர்தல் இல்லை என்றார்.
![]() |
ஸ்டாலின்:
வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், கூட்டணி மிக பலமாக உள்ளதால் 220இடங்களிலாவது வெல்வோம் என்றார்.அழகிரி பேட்டி:
ஆண்டிப்பட்டியில் முகாமிட்டுள்ள அழகிரி கூறுகையில், இந்தத் தொகுதியில் ஜெயலிலதா தோற்பார்.ஆண்டிப்பட்டியை அரசிப்பட்டியாக்குவோம் என ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனால், அது இப்போதுஅழகிரிபட்டியாக மாறிவிட்டது என்றார்.














Click it and Unblock the Notifications