ராமதாஸ் மீது கொலை வழக்கு: ஆளுனரிடம் திமுக கூட்டணி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திண்டிவனத்தில் அதிமுக தொண்டர் கொலை தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ்உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கை திரும்பப் பெறுமாறு தமிழக அரசுக்குஉத்தரவிடக் கோரி திமுக கூட்டணிக் கட்சிகள் ஆளுனர் பர்னாலாவை நேரில் சந்தித்துமனு கொடுத்தன.

அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டிற்குள் புகுந்த கும்பல் ஒன்று நடத்திய வெறித்தாக்குதலில், அதிமுக தொண்டர் முருகானந்தம் என்பவர் படுகொலைசெய்யப்பட்டார். இச் சம்பவம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ், மத்தியஅமைச்சர் அன்புமணி, ராமதாசின் மருமகன் பரசுராமன் உள்ளிட்ட 22 பேர் மீதுதிண்டிவனம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெவுக்கு ராமதாஸ் கண்டனம்:

இதற்கு ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ளஅறிக்கையில்,

அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டில் நடந்த சம்பவம் தொடர்பாக என் மீதும், எனதுமகன், மருமகன் மற்றும் கட்சியினர் மீதும் பொய் வழக்குகளை காவல்துறையினர்பதிவு செய்துள்ளனர். அமைச்சர் சண்முகத்தின் தூண்டுதலின் பேரிலேயே எங்கள் மீதுபொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன.

பொய் வழக்கு போடுவது என்பது ஜெயலலிதாவின் பண்பாடு. இப்போது ஆட்சியைவிட்டுப் போகப் போகிறோமே என்ற விரக்தியில், கடைசி முறையாக இதைஅரங்கேற்றியிருக்கிறார்.

ஆட்சியை விட்டுப் போகப் போகும் கோபத்தில், ஆட்சியிலிருந்து விலகுவதற்குள்தமிழகத்தை கலவர பூமியாக மாற்றி விட வேண்டும் என்ற சதியில் அவர்இறங்கியுள்ளார். இதை அனைவரும் அமைதி காத்து முறியடிக்க வேண்டும் என்றுகூறியுள்ளார் ராமதாஸ்.

கருணாநிதி எதிர்ப்பு:

அதே போல ராமதாஸ் மீது வழக்கு தொடரப்பட்டிருப்பதற்கு திமுக தலைவர்கருணாநிதியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், தனது அரசியல் காழ்ப்புணர்ச்சியைத் தீர்த்துக்கொள்ள கடைசி நேரத்திலும் கூட தனது அதிகாரத்தை செலுத்தி அநீதிக் கொடியைநாட்ட முயன்றுள்ளார் ஜெயலலிதா.

குறுக்கு வழியில் தனது கொடுங்கோலை செலுத்திட முனைவது வன்மையாககண்டித்தக்ககது என்று கூறியுள்ளார். இதே போல, திராவிடர் கழகத் தலைவர்கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் மீதான வழக்கை வாபஸ் பெறஉத்தரவிட வேண்டும் என்று கோரி திமுக கூட்டணிக் கட்சியினர் ஆளுனர்பர்னாலாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய அமைச்சர்கள் சந்திப்பு:

திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி, காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, பாமகதலைவர் ஜி.கே.மணி, மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், ஜி.கே.வாசன்,ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் ஆளுனரை சந்தித்து இது தொடர்பாககோரிக்கை மனுவைக் கொடுத்தனர்.

மனுவில், ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பரசுராமன், வேட்பாளர் கருணாநிதிஉள்ளிட்டோர் மீது பொய் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பயத்தின்காரணமாக ராமதாஸுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் களங்கம் ஏற்படுத்தவேண்டும், பொதுமக்கள் மற்றும் பாமக தொண்டர்களிடம் அவப் பெயர் ஏற்படுத்தவேண்டும் என்ற அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே இந்த பொய்வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதில் மேல் நடவடிக்கை எடுப்பதை நிறுத்துமாறு தமிழக அரசுக்கு ஆளுனர்உத்தரவிட வேண்டும். பொய் வழக்கை திரும்பப் பெறுவதற்கும் உதவ வேண்டும்என்று கூறப்பட்டுள்ளது.

2 பாமகவிர் கைது:

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே குமரன் என்ற பாமக தொண்டரைப் போலீஸார்கைது செய்துள்ளனர். இந் நிலையில் இன்று சிவா என்ற மேலும் ஒரு பாமகதொண்டரை போலீஸார் கைது செய்தனர்.

அதிமுகவினர் கடையடைப்பு:

இதற்கிடையே திண்டிவனம் சம்பவத்தைக் கண்டித்து இன்று விழுப்புரத்தில்அதிமுகவினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுகவினரின் மிரட்டல் கலந்த கோரிக்கையைத் தொடர்ந்து விழுப்புரத்தின்பல்வேறு பகுதிகளில் கடைகள் மூடப்பட்டுள்ளன.

ராமதாஸுக்கு சுகந்தன் கண்டனம்:

இதற்கிடையே மக்களின் தீர்ப்பை ஏற்கும் மனப் பக்குவம் இன்னும் டாக்டர் ராமதாஸுக்கு வராமல் இருப்பது வேதனையாக இருக்கிறது என்றுமறைந்த வாழப்பாடி ராமமூர்த்தியின் மகனும், பாஜக இளைஞர் அணி தேசியச் செயலாளருமான ராம சுகந்தன் கூறியுள்ளார்.

வன்னிய சமூகத்தைச் சேர்ந்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாக்டர் ராமதாஸும், அவரது கட்சியினரும் தேர்தலில் தங்கள் சொந்தத் தொகுதியில்அதிமுகவிடம் தோற்று விடுவோம் என்ற அச்சத்தில் அமைச்சர் சண்முகத்தை கூலி ஆட்களை ஏவி விட்டு கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுஜனநாயக விரோத செயல்.

தான் சார்ந்த வன்னியர் சமூகத்தில் தன்னை விட யாரும் உயர்ந்து விடக் கூடாது, வளர்ந்து விடக் கூடாது என்ற குறுகிய மனப்பான்மையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் ராமதாஸ்.

தன்னுடைய குடும்பம்தான் வன்னியர் சமுதாயத்தின் ஏகபோக பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் வன்னிய மக்கள்ராமதாஸின் குடும்பத்திற்கு எதிரான தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாத தலைவராகஇன்னும் ராமதாஸ் இருப்பது வேதனைக்குரியது என்று கூறியுள்ளார் ராம சுகந்தன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+