கலகல அண்ணா அறிவாலயம்: நிசப்தத்தில் போயஸ்
சென்னை:
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கிறது. அதிமுகவுக்கு மரண அடி விழுந்துள்ளது.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே திமுக கூட்டணி பெருவாரியான இடங்களில்முன்னிலை வகித்தது.இதையடுத்து கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்தின் முன்பும், அண்ணா சாலையில்உள்ள திமுகவின் கட்சி அலுவலகமான அண்ணா அறிவாலயம் முன்பும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள்குவிந்தனர்.
வெடி போட்டும், இனிப்பு வழங்கியும், டாக்டர் கலைஞர் வாழ்க என கோஷம் எழுப்பியும், மேள தாளத்துடன்ஆட்டம் போட்டும் மகிழ்ச்சிக் கடலில் திமுகவினர் ஆழ்ந்துள்ளனர். அண்ணா சாலையே அமர்க்களப்பட்டுக்கொண்டுள்ளது.
திமுக முன்னிலை என்ற தகவல் வந்ததைத் தொடர்ந்து கோபாலபுரத்தில் இருந்து அண்ணா அறிவாலயத்துக்குக்கிளம்பினார் கருணாநிதி. அவரை தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு வாழ்த்தொலி எழுப்பினர்.
தமிழகம் முழுவதுமே திமுகவினர் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.
சேப்பாக்கம் தொகுதியில் இருந்து திமுக தலைவர் கருணாநிதி மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
அதே நேரத்தில் அதிமுக தலைமையகத்திலும் போயஸ் கார்டனிலும் பெருத்த நிசப்தம் நிலவுகிறது. அக் கட்சிஅலுவலகமும் வெறிச்சோடிக் கிடக்கிறது.












Click it and Unblock the Notifications