அதிமுக தோல்வியால் அதிர்ச்சி-பெண் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக ஆட்சியை இழந்ததைத் தாங்க முடியாமல், சென்னையைச் சேர்ந்த 3குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை வியாசர்பாடி இந்திரா நகரைச் சேர்ந்தவர் கோபால். அப்பகுதி எம்.ஜி.ஆர்.மன்றச் செயலாளராக இருக்கிறார். இவரது மனைவி வசந்தி. இவரும் அதிமுகவின்தீவிர விசுவாசி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இட்லிக் கடை நடத்தி வந்தார்வசந்தி.

சட்டசபைத் தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்ததால் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்வசந்தி. ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் வெற்றி பெற்றதால் சந்தோஷத்தில் இருந்தவசந்திக்கு, அதிமுக ஆட்சியை இழந்த செய்தி பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

யாரிடமும் பேசாமல் அழுதபடியே இருந்தார். இந் நிலையில் தனது உடலில்மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் வசந்தி பரிதாபமாக இறந்தார்.

தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார். அதில்,ஜெயலலிதா அவர்களுக்கு, நீங்கள் மனம் தளர்ந்து விடாதீர்கள். உங்களது மனம்என்ன பாடுபட்டிருக்கும் என்பதை அறிய முடிகிறது.

என்னால் நமது கட்சி தோல்வி அடைந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான்உங்களுக்கு ஊர் ஊராக பிரசாரம் செய்யவில்லை, கட்சிக் கொடியேற்றவில்லை.உங்களுக்குத் துரோகம் இழைத்து விட்டேன் என்று எழுதியுள்ளார் வசந்தி.

கார்த்திக் வேட்பாளர் தங்கை தற்கொலை:

இதே போல கார்த்திக் கட்சியின் சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் போட்டியிட்டவேட்பாளர் ஒருவரின் தங்கை அவரது தோல்வியை ஏற்க முடியாமல் தற்கொலைசெய்து கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+